ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த இணையவழி கருத்தரங்கம் நாள்: 20.02.2023 Seminar on Export Import Logistics Handling - Minnalseithi

Latest

Search This Blog

Monday, February 20, 2023

ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த இணையவழி கருத்தரங்கம் நாள்: 20.02.2023 Seminar on Export Import Logistics Handling

ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த இணையவழி நாள்: 20.02.2023 கருத்தரங்கம் 

இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே உள்ளன. எனவே ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னை, ஏற்றுமதிஇறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த இணையவழி கருத்தரங்கம் (2 நாட்கள்) பயிற்சியினை வரும் 23.02.2023 தேதி முதல் 24.02.2023-ம் தேதி வரை (மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) வழங்க உள்ளது. 

என்ற இப்பயிற்சியில் ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் முறைகள், பல்வேறு வகையான போக்குவரத்துக்கள், பலதரப்பட்ட போக்குவரத்து மாதிரி அமைப்புக்கள், குறித்த அறிமுகங்கள், சுங்கத்துறை முகவர்களின் பணிகள் சரக்கு அனுப்புபவர்கள், கப்பல் முகவர்கள், விமான சரக்கு முகவர்கள்,கப்பல் அல்லாத சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள், கொள்கலன் சரக்கு நிலையம்உள்நாட்டு கொள்கலன் டிப்போக்கள் நடத்துபவர்கள், சரக்கு வகைகள், தட்டுப்படுத்தல், கொள்கலன்மயமாக்கல், முழு கொள்கலத்தினை / குறைந்த கொள்கலன் ஏற்றுமதி , கப்பல் மற்றும் விமான சரக்கு செயல்பாடுகள், கப்பல் போக்குவரத்து வகைகள், சர்வதேச வர்த்தக விதிமுறைகள் 2020, கப்பல் ஏற்றுமதி ஒப்பந்த சீட்டு, விமான வழிரசீது மற்றும் முக்கிய சேவைகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் செயல்முறை சுங்க அனுமதி நடைமுறை அறிமுகம், சுங்க பிணைக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் அனுமதிக்கு தேவையான ஆவணங்கள். போன்ற ஏற்றுமதிக்கான பல்வேறு செயல்பாடுகள் குறித்த பயிற்சிகள் நடத்தப்படுகிறது. 

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள். முன்பதிவு அவசியம்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு. ஈக்காட்டுத்தாங்கல், FOOT 600OOT - 600 032. 44-22252081/22252082, 9677152265, 8668102600. வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 

Seminar on Export Import Logistics Handling There are increasing opportunities for businesses to expand through the export and import of manufactured goods/services in India. So it is necessary to know clearly about export import logistics handling. Government of Tamil Nadu Entrepreneurship Development and Innovation Institute, Chennai is going to conduct e-seminar (2 days) training on Export Import Logistics Handling from 23.02.2023 to 24.02.2023 (2.30 PM to 5.30 PM). 

 In this training, export and import logistics handling methods, different types of transport, various transport model systems, introductions, duties of customs agents, freight forwarders, shipping agents, air cargo agents, non-ship own vehicle owners, container freight station, operators of inland container depots, types of cargo, palletizing , containerization, full container / less container export, shipping and air freight operations, types of shipping, international trade regulations 2020, shipping contract slip, air waybill and process of providing essential services and equipment Introduction to customs clearance procedure, customs bonded warehouses and clearance required Documents. 

Trainings are conducted on various activities for export like Anyone who has completed 18 years of age and passed 10th standard who wants to start an export oriented business or want to export the products they are currently manufacturing can join. Those who want to get more details about this training can visit the website www.editn.in. For further details office working days (Monday to Friday) 10 AM to 5.45 PM contact address and telephone / mobile numbers. Booking required: Tamil Nadu Entrepreneurship Development and Innovation Institute, CITCO Industrial Estate, Parthasarathy Temple Street. EKATTUTHANGAL, FOOT 600OOT - 600 032. 44-22252081/22252082, 9677152265, 8668102600. Publication: Director, News Public Relations, Chennai-9

No comments:

Post a Comment