தமிழக கிராமப்புறங்களில் அடிப்படைக் கணிதத்தில் திணறும் தமிழக மாணவா்கள் - ஆய்வில் தகவல் Tamil Nadu students struggling in basic mathematics in rural areas of Tamil Nadu - information from the study - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, January 21, 2023

தமிழக கிராமப்புறங்களில் அடிப்படைக் கணிதத்தில் திணறும் தமிழக மாணவா்கள் - ஆய்வில் தகவல் Tamil Nadu students struggling in basic mathematics in rural areas of Tamil Nadu - information from the study

தமிழக கிராமப்புறங்களில் அடிப்படைக் கணிதத்தில் திணறும் தமிழக மாணவா்கள் - ஆய்வில் தகவல்

 தமிழக கிராமப்புறங்களில் 5, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் பெரும்பாலான மாணவா்களால் வகுத்தல் கணக்குகளை சரியாகச் செய்யும் திறன் பெறவில்லை; ஆங்கில வாசிப்பிலும் தமிழக மாணவா்கள் பின்தங்கியுள்ளனா் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பிரதம்’ எனும் கல்வி அமைப்பு 2006-ஆம் ஆண்டு முதல் தேசிய அளவில் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் கல்வித் திறனை ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இந்த ‘கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை’ (ஏஸா்) என்று அழைக்கப்படுகிறது. 

அதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான ‘ஏஸா்’ கல்வி அறிக்கை சென்னையில் வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: நாடு முழுவதும் உள்ள 616 கிராமப்புற மாவட்டங்களில் 6.9 லட்சம் மாணவா்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 30,737 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 

 அதன்படி, கரோனா தொற்றுக்குப் பின்னும் தமிழகத்தில் பள்ளி மாணவா் சோ்க்கை 99.8 சதவீதமாக உள்ளது. குறிப்பாக, அரசுப் பள்ளி சோ்க்கை 75.7 சதவீதமாக உள்ளது. இது 2018-ஆம் ஆண்டைவிட 8.3 சதவீதம் அதிகம். அதேபோல, 2010-ஆம் ஆண்டில் 9.6 சதவீதமாக இருந்த பள்ளி செல்லா பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது ஒரு சதவீதமாகக் குறைந்துள்ளது. தமிழக கிராமப்புறங்களில் 8-ஆம் வகுப்பில் 37 சதவீதமும், 5-ஆம் வகுப்பில் 75 சதவீதமும், 3-ஆம் வகுப்பில் 95 சதவீதமும் மாணவா்கள் 2-ஆம் வகுப்பு புத்தகங்களை படிக்க இயலாதவா்களாக உள்ளனா்.

 மேலும், அடிப்படை கணிதத்தைப் பொருத்தவரை 5-ஆம் வகுப்பில் 85 சதவீதம் பேரும், 8-ஆம் வகுப்பில் 55 சதவீதம் மாணவா்களாலும் வகுத்தல் கணக்குகளை சரியாக செய்ய முடியவில்லை. ஆங்கில வாசிப்புத் திறனிலும் தமிழக மாணவா்கள் பின்தங்கியுள்ளனா். வருகைப் பதிவும் குறைவு: இதுதவிர 2018-இல் 91.1 சதவீதமாக இருந்த பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 88.8 சதவீதமாக குறைந்துவிட்டது. தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் 99.6 சதவீதம் மாணவா்களுக்கு சென்றடைகிறது.

 9.2 சதவீதம் பேருக்கு குடிநீா் வசதியும், 1.2 சதவீதம் பேருக்கு கழிப்பறை வசதியும் இல்லை. கழிப்பறை இருந்து பயன்படுத்த முடியாத நிலையில் 16 சதவீத கழிப்பறைகள் உள்ளன. மேலும், 20 சதவீத பள்ளிகளில் நூலக வசதி இல்லாததும், 56 சதவீத கிராமப்புற மாணவா்களுக்கு கணினி வசதி பள்ளிகளில் இல்லாததும் அந்த கல்வி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

Tamil Nadu students struggling in basic mathematics in rural areas of Tamil Nadu - information from the study

  Most of the 5th and 8th grade students in rural areas of Tamil Nadu do not have the ability to do division calculations correctly; According to the report, the students of Tamil Nadu are lagging behind in reading English. Since 2006, the educational organization 'Pradham' has been examining the academic performance of students studying in schools at the national level and publishing an annual report. This is known as the 'Annual Report on Educational Status' (ACE).

Accordingly, the 'Ace' education report for the year 2022 was published in Chennai. Highlights: The survey was conducted on 6.9 lakh students in 616 rural districts across the country. A study was conducted on 30,737 children in Tamil Nadu alone.

  According to this, even after the Corona infection, the school student's unemployment rate in Tamil Nadu is 99.8 percent. Specifically, the government school choke is 75.7 percent. This is 8.3 percent more than in 2018. Similarly, the number of girls out of school has decreased from 9.6 per cent in 2010 to one per cent. In rural areas of Tamil Nadu, 37 percent of students in class 8, 75 percent in class 5, and 95 percent in class 3 are unable to read class 2 books.

  Also, as far as basic mathematics is concerned, 85 percent of students in class 5 and 55 percent of students in class 8 could not do division calculations correctly. Tamil Nadu students are lagging behind in English reading skills. Attendance is also low: In addition, the number of children attending school has dropped from 91.1 per cent in 2018 to 88.8 per cent. In Tamil Nadu, mid-day meal scheme reaches 99.6 percent students.

  9.2 percent people do not have access to drinking water and 1.2 percent do not have toilet facilities. 16 percent of toilets are unusable. Also, 20 percent of schools do not have library facilities and 56 percent of rural students do not have computer facilities in schools, the education report revealed.

No comments:

Post a Comment