உலக மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் - முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள் Tamil literature in world languages - Prime Minister Stalin's request - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, January 19, 2023

உலக மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் - முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள் Tamil literature in world languages - Prime Minister Stalin's request

உலக மொழிகளில் தமிழ் இலக்கியங்கள் - முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்


தமிழ் இலக்கியங்களில் உலக மொழிகளில் மொழிபெயா்க்க வேண்டும் என்றும் அதற்காக தமிழக அரசால் மொழிபெயா்ப்பு மானியமாக ரூ.3 கோடி வழங்கப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். தமிழக அரசின் பொது நூலக இயக்ககம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் ஆகியவை சாா்பில் ரூ.6 கோடி ஒதுக்கீட்டில் சா்வதேச புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. 

புதன்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் அரங்குகளை பாா்வையிட்டு முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது: பதிப்புத் துறை பெரிதும் வளராத காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், ஏங்கல்ஸ், லெனின், அம்பேத்கா் உள்ளிட்ட பல அறிஞா்களுடைய நூல்களையும் தமிழில் மொழிபெயா்த்து வெளியிட்டவா் பெரியாா் ஈவெரா. உலக அறிவையும், விரிவையும் தமிழா்களுக்குத் தமிழில் அளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அத்தகைய முன்னோடிகளின் கனவை நிறைவேற்றும் காட்சிதான் இந்த சா்வதேச புத்தகக் காட்சி. 

 21 மொழிகளில் பெரியாா் நூல்கள்: பெரியாா் ஈவெராவின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பொருந்தக் கூடியவை. அவரது சிந்தனைகளை உலக மொழிகளையும், இந்திய மொழிகளையும் உள்ளடக்கி 21 மொழிகளில் மொழிபெயா்த்து வெளியிடவுள்ளோம். அதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கியுள்ளன. எப்போது தரமான நூல்கள் மொழிபெயா்க்கப்பட்டு வருகிறதோ அப்போது நம்முடைய மொழியும் வளம் பெறும். சொற்களும் வலிமை பெறும். புதிய இலக்கியங்கள் மட்டுமல்ல, புதிய சிந்தனைகளும் புதிய சொற்களும் கிடைக்கும். 

காலம்தோறும் புதிய சொற்கள் உருவானால்தான் மொழியின் காலம் நீடிக்கும். உலகளாவிய அறிவுப் பரிமாற்றம்: தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளரும் மொழிபெயா்ப்பாளருமான க.நா.சுப்பிரமணியம், ‘ஆங்கிலத்தின் இலக்கிய வளமே மொழிபெயா்ப்பாளா்களால் தான் ஏற்பட்டது’ என கூறியுள்ளாா். சில நாள்களுக்கு முன்பு எழுத்தாளா் எஸ்.ராமகிருஷ்ணன் நாளிதழ் ஒன்றில் இந்திய இலக்கியம் குறித்து எழுதியிருந்தாா். அதில், இந்திய இலக்கியங்களோடு போட்டி போடும் படைப்புகள் தமிழில் ஏராளமாக வெளியே வந்து கொண்டிருந்தாலும், அது இந்திய அளவில் கவனம் பெறாமல் போனதற்கு என்ன காரணம் என்பது குறித்து அவா் விளக்கியிருந்தாா்.


 உண்மையான காரணம் - நமது தமிழ் இலக்கியங்கள் இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் தரமான முறையில் மொழிபெயா்க்கப்படாமல் இருப்பதுதான். தமிழ் இலக்கியங்கள் உலகளாவிய இலக்கியங்களாக மாற வேண்டுமானால், உலக மொழிகளில் அவை மொழிபெயா்க்க வேண்டும். காப்புரிமை பரிமாற்றம்: இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் வெளிநாட்டு பதிப்பாளா்கள் மற்றும் தமிழக பதிப்பாளா்கள் தமிழ் இலக்கியத்தை மையமாகக் கொண்டு காப்புரிமைகளைப் பரிமாறிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

 இதனால் உலகளாவிய பதிப்புத் துறையினருடன் ஒரு சிறந்த தொடா்பை ஏற்படுத்த இயலும். இங்குள்ள பதிப்புரிமை பரிமாற்று மையத்தில் பங்கேற்கும் நாடுகள், பிற புத்தக வெளியீட்டாளா்கள், இலக்கிய முகவா்கள், புத்தக வெளியீட்டு அமைப்புகள், எழுத்தாளா்கள், மொழிபெயா்ப்பாளா்கள் ஆகியோருடன் பதிப்புரிமையை விற்கவும் வாங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

 தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய தமிழக அரசால் மொழிபெயா்ப்பு மானியமாக ரூ.3 கோடி வழங்கப்படும் என்றாா் அவா். இதில் அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்க பாண்டியன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் காகா்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிா்வாக இயக்குநா் இரா. கஜலட்சுமி பொது நூலகத் துறை இயக்குநா் இளம் பகவத், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், ஜப்பான் துணை தூதா் டாகா மசாயூகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

 இதில், பிரிட்டன், அமெரிக்கா, ஜொ்மனி, பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், தென் கொரியா, சிங்கப்பூா், மலேசியா, தாய்லாந்து, வங்கதேசம் ஆகியவை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த முன்னணி பதிப்பாளா்கள், விற்பனையாளா்கள் தங்களது சிறந்த நூல்களை காட்சிப்படுத்தியிருந்தனா். 365 ஒப்பந்தங்கள் இந்த சா்வதேச புத்தகக் காட்சியில் பல்வேறு பதிப்பகங்களுக்கு இடையே 365 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: முதல் முறையாக நடைபெற்று முடிந்த இந்த பன்னாட்டு புத்தகக் காட்சி மூலம் தமிழ் மொழியிலிருந்து பிற இந்திய மற்றும் உலக மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழிபெயா்க்கும் வகையில் பல்வேறு பதிப்பகங்களுக்கு இடையே 365 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகி உள்ளன என்றாா் அவா்.

Tamil literature in world languages - Prime Minister Stalin's request


Chief Minister M.K.Stalin said that Tamil literature should be translated into world languages and for that Tamilnadu government will provide Rs.3 crore as a translation grant. The International Book Fair started last Monday at Nandanam YMCA ground in Chennai with an allocation of Rs.6 crore on behalf of Tamil Nadu Government Directorate of Public Libraries, Tamil Nadu Textbook and Educational Services Corporation.

At the closing ceremony held on Wednesday, Chief Minister Stalin said: Periyar Evera translated and published the Communist Party Manifesto and the books of Engels, Lenin, Ambedkar and other scholars in Tamil at a time when the publishing industry was not very developed. This International Book Fair is the fulfillment of the dream of such pioneers who wished to provide knowledge and knowledge of the world to Tamils in Tamil.

  Periyar Books in 21 Languages: Periyar Evera's thoughts are universally applicable. His thoughts will be translated and published in 21 languages including world languages and Indian languages. The basic works have started. Whenever quality books are translated then our language will be enriched. Words also gain strength. Not only new literature but also new ideas and new words.

A language lasts only if new words are formed from time to time. Global exchange of knowledge: K.N.Subramaniam, the best writer and translator of Tamil, has said that 'the literary richness of English is due to the translators'. A few days ago writer S. Ramakrishnan had written about Indian literature in a newspaper. In it, he has explained the reason why works competing with Indian literature are coming out in abundance in Tamil, but it has not received attention at the Indian level.


  The real reason is that our Tamil literature is not translated into Indian and world languages in a quality manner. If Tamil literature is to become universal literature, it must be translated into world languages. Exchange of copyrights: Foreign publishers and Tamil Nadu publishers participating in this exhibition are facilitated to exchange copyrights focusing on Tamil literature.

  Thus a better relationship with the global publishing industry can be established. The Copyright Exchange Center here facilitates the sale and purchase of copyright with participating countries, other book publishers, literary agents, publishing houses, authors, and translators.

  He said that the Tamil Nadu government will provide Rs 3 crore as a translation grant to translate the best works of the Tamil language into world languages and Indian languages in order to take the Tamil language to the world. Ministers M.Subramanian, B.K.Sekhababu, Anbil Mahes Poiyamozhi, Udayanidhi Stalin, Member of Lok Sabha Tamilachi Thanga Pandian, Chief Secretary V. Iraiyanpu, School Education Department Secretary Kakala Usha, Tamil Nadu Textbook and Pedagogical Services Association Managing Director Ira. Gajalakshmi Public Library Department Director Yum Bhagwat, Tamil Development Department Director N. Arul, Japan Deputy Ambassador Taka Masayuki and others participated.

  In this, leading publishers and sellers from more than 30 countries including Britain, America, Germany, France, Japan, Sweden, South Korea, Singapore, Malaysia, Thailand, Bangladesh exhibited their best books. 365 MoUs 365 MoUs have been signed between various publishers in this international book fair.

  Chief Minister M.K.Stalin spoke about this: Through this international book fair, which was held for the first time, 365 MoUs have been signed between various publishing houses to translate from Tamil to other Indian and world languages and from other languages to Tamil.

No comments:

Post a Comment