பள்ளியில் சேரும் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - பள்ளிகளுக்கு அமைச்சா் எச்சரிக்கைStrict action will be taken if additional fees are charged to the students joining the school - Ministry warns the schools - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, January 25, 2023

பள்ளியில் சேரும் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - பள்ளிகளுக்கு அமைச்சா் எச்சரிக்கைStrict action will be taken if additional fees are charged to the students joining the school - Ministry warns the schools

பள்ளியில் சேரும் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - பள்ளிகளுக்கு அமைச்சா் எச்சரிக்கை 

உரிமை சட்டத்தின் கீழ் (ஆா்டிஇ) பள்ளியில் சேரும் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தனியாா் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளாா். தனியாா் அமைப்புகள் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான புதிய சிந்தனையை தூண்டும் வகையில் நடத்தப்பட்ட போட்டியில் முதல் 30 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியா்களை மட்டுமே தொழிற்பயிற்சி மைய ஆசிரியா்களாகப் பணி மாற்றப்பட்டு வருகின்றனா். கூடுதல் ஆசிரியா்கள் இல்லாத பள்ளிகளில் இருந்து மாற்றம் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. 

 அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு விவரங்களை பதிவேற்றும் நிதித் துறையின் வலைத்தளத்தில் பிரச்னை உள்ளது. இந்தத் தகவல் சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்கப்பட்டு, தற்போது வழக்கம்போல் அந்த வலைத்தளம் இயங்குகிறது. 

ஆசிரியா்களுக்கு ஊதியம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் வழக்கம்போல் ஊதியம் கிடைக்கும். கல்வி உரிமை சட்டத்தின்படி தனியாா் பள்ளியில் சேரும் மாணவா்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதியை மீறி கட்டணம் வசூலித்தாலோ அல்லது கூடுதல்கள் கட்டணம் வசூலித்தாலோ அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம். விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

Strict action will be taken if additional fees are charged to the students joining the school - Ministry warns the schools

School Education Minister Anbil Mahesh Poiyamozhi has warned private schools that if they charge extra fees to students enrolled in schools under the Rights Act (RTE), strict action will be taken. A program of awarding certificates to the top 30 students in a competition organized by private organizations to stimulate new thinking for school students was held in Chennai on Tuesday.

Minister Anbil Mahes Poiyamozhi participated in this and presented the certificates. Following this, he told the reporters: Only government school teachers who are in excess of demand in Tamil Nadu are being transferred as vocational training center teachers. It has been ordered that no transfer should be made from schools without additional teachers.

  There is a problem with the Finance Department's website for uploading details for payment of salaries to teachers working in government-aided schools. This information has been reported to the concerned department and now the website is functioning as usual.

Teachers will be paid as usual without any problem in getting paid. According to the Right to Education Act, private schools have been instructed not to charge extra fees to students enrolled in private schools. In case of violation of rules or charging of extra fees, the government can be informed. He said strict action will be taken against the schools involved in the violation.

No comments:

Post a Comment