அரசுப் பள்ளிகளில் என்.எஸ்.எஸ். நிதியை வங்கியில் செலுத்த திட்டம் - பள்ளிக்கல்வித் துறை NSS in Government Schools Scheme for Remittance of Funds into Bank - Department of School Education - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, January 19, 2023

அரசுப் பள்ளிகளில் என்.எஸ்.எஸ். நிதியை வங்கியில் செலுத்த திட்டம் - பள்ளிக்கல்வித் துறை NSS in Government Schools Scheme for Remittance of Funds into Bank - Department of School Education

அரசுப் பள்ளிகளில் என்.எஸ்.எஸ். நிதியை வங்கியில் செலுத்த திட்டம் - பள்ளிக்கல்வித் துறை 

பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டத்துக்கு (என்.எஸ்.எஸ்) மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது.

 நடப்பு கல்வி ஆண்டு முதல்என்எஸ்எஸ் நிதியை பள்ளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதற்கு மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. இதற் காக அரசுப் பள்ளிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் பிரத்யேக வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, என்எஸ்எஸ் திட்டம் அமலில் உள்ள அரசுப் பள்ளிகள், எஸ்பிஐ வங்கியில் புதிதாக பூஜ்ஜிய இருப்பு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். 

அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு ஜன.20-ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும், இதுசார்ந்து மறு உத்தரவு வரும் வரை என்எஸ்எஸ் வங்கிக் கணக்குகளை எந்தக்காரணம் கொண்டும் முடிக்கக் கூடாது என்று பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும்.

NSS in Government Schools Scheme for Remittance of Funds into Bank - Department of School Education

In the circular sent to all the District Primary Education Officers on behalf of the School Education Commission, it is stated that:- Funds are provided by the Central Government for the National Welfare Scheme (NSS) operating in Government Secondary Schools.

  The central government has decided to disburse NSS funds directly into the bank accounts of schools from the current academic year. For this, government schools have also been advised to open a separate bank account in Bharat State Bank. Accordingly, government schools where the NSS scheme is in force should open a new zero balance savings account with SBI Bank.

The respective district primary education officers should compile its details and send them to the directorate by January 20. Further, appropriate instructions should be issued to school principals not to close NSS bank accounts for any reason till further orders in this regard.

No comments:

Post a Comment