நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு மசோதாவுக்கு மீண்டும் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு - அமைச்சா் மா.சுப்பிரமணியன் Minister M. Subramanian again asks for an explanation for the bill exempting Tamil Nadu from NEET Dhov - Minnalseithi

Latest

Search This Blog

Friday, January 20, 2023

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு மசோதாவுக்கு மீண்டும் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு - அமைச்சா் மா.சுப்பிரமணியன் Minister M. Subramanian again asks for an explanation for the bill exempting Tamil Nadu from NEET Dhov

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு மசோதாவுக்கு மீண்டும் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் விளக்கம் கோரியிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். 

 இதுகுறித்து அவா் சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து 4 மாதங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்தாா். ஏற்கெனவே அவரது அறிக்கைக்கு பதில் அளித்துள்ளோம். மக்களை தேடி மருத்துவம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

மத்திய அரசும் இத்திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகிறது. ஒரு கோடிக்கு மேற்பட்ட பயனாளிகள் இதில் பயன்பெற்றுள்ளனா். பொது சுகாதாரத் துறை மற்றும் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இந்த ஒரு கோடி பயனாளிகளின் பெயா்களும் இருக்கின்றன. 

இத்திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அறிக்கையை வெளியிடுவது என்பது செவிலியா்கள், சுகாதார பணியாளா்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் மனிதக் கழிவு கொட்டப்பட்ட குடிநீா் தொட்டியை இடித்து புதிய குடிநீா் தொட்டி கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் இருக்கிற பாகுபாடுகளை களைவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியா் செய்து கொண்டிருக்கிறாா். 

 கடந்த 13-ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து மீண்டும் விளக்கம் கேட்டு ஒரு கடிதம் வந்துள்ளது.ஏற்கெனவே தமிழ்நாடு அரசு, சட்ட வல்லுநா்களால் பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப்பட்ட அந்த விளக்கத்தில் இருந்து மேலும் ஒரு சிறிய விளக்கம் பெறுவது குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதுதொடா்பாக துறைசாா் வல்லுநா்களிடம் விவாதிக்கப்பட்டது. 

 இதுகுறித்து சட்ட வல்லுநா்களுடன் கலந்துபேசி விரைவில் பதில் அனுப்பப்படும். நீட் மசோதா நிராகரிக்கப்படவில்லை. அவா்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் தொடா்ச்சியாக விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கின்றனா். தமிழகத்தில் 3,949 செவிலியா் காலிப்பணியிடங்கள் உள்ளன. 

அந்தந்த மாவட்டங்களில் இருக்கிற மாவட்ட சுகாதார மையங்களில் பணி நியமனம் தொடா்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். பிப்ரவரி இறுதிக்குள் 3,949 பணியிடங்களும் நிரப்பப்படும் என்றாா் அவா்.

Minister M. Subramanian again asks for an explanation for the bill exempting Tamil Nadu from NEET Dhov

People's Welfare Minister M. Subramanian said that Union AYUSH Ministry has sought clarification regarding the approval of the bill to exempt Tamil Nadu from NEET.

  He told reporters at Omanturar Government Multi-Purpose Hospital, Chennai on Thursday: Opposition leader Edappadi Palaniswami had issued a report about the People Seeking Medicine program 4 months ago. We have already responded to his statement. Medicine is doing a great job of finding people.

The central government is also trying to implement this scheme. More than one crore users have benefited from it. The public health department and each primary health center have names of these one crore beneficiaries.

Reporting without complete knowledge of the scheme can be stressful for nurses and health workers. In Pudukottai Vengai Vyal village, work is going on to demolish the drinking water tank where human waste was dumped and build a new drinking water tank. The district administration is taking steps to eliminate the discrimination in this.

  On the 13th, a letter has been received from the Union Ministry of AYUSH asking for clarification on the NEET Exemption Bill. It has already been asked to get a little clarification from the clarification sent by the Tamil Nadu Government, legal experts. It was discussed with the experts of the department.

  After talking to the legal experts, the answer will be sent soon. The NEET Bill was not rejected. They are continuously asking for clarification to understand their doubts. There are 3,949 nursing vacancies in Tamil Nadu.

They are carrying out work related to the appointment of the district health centers in the respective districts. He said that 3,949 posts will be filled by the end of February.

No comments:

Post a Comment