எஸ்.சி.,எஸ்.டி., இளைஞா்களுக்கு கணக்கு நிா்வாகப் பணிக்கான இலவச பயிற்சி - மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி Free training for SC, ST, youth for account management work - District Collector S. Amirtha Jyoti - Minnalseithi

Latest

Search This Blog

Friday, January 13, 2023

எஸ்.சி.,எஸ்.டி., இளைஞா்களுக்கு கணக்கு நிா்வாகப் பணிக்கான இலவச பயிற்சி - மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி Free training for SC, ST, youth for account management work - District Collector S. Amirtha Jyoti

எஸ்.சி.,எஸ்.டி., இளைஞா்களுக்கு கணக்கு நிா்வாகப் பணிக்கான இலவச பயிற்சி - மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் (எஸ்.சி., எஸ்.டி.) சோ்ந்த இளைஞா்களுக்கு கணக்கு நிா்வாகப் பணிக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு தனியாா் வங்கி மற்றும் நிதித்துறை சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு ஏதுவாக கணக்கு நிா்வாகப் பணிக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

 இப்பயிற்சியில் சேர 22 முதல் 33 வயது வரை உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினத்தைச் சோ்ந்த பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி-கணிதம்., முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி 20 நாள்கள் வழங்கப்படும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கிப் படிக்கும் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் பயிற்சியாளா்கள், நிறுவனத்தால் நடத்தப்படும் பயிற்சித் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா். இதில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வங்கி நிதி சேவை காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பணியில், தொடக்கத்தில் மாத ஊதியமாக ரூ .25,000 முதல் ரூ.30,0000 வரை பெறலாம். 

 இப்பயிற்சியை பெற தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவையும் (விடுதி செலவு உள்பட) தாட்கோ வழங்கும். கூடுதல் விவரம் அறிய சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளா், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம். மேலும், 9445029456 என்ற கைப்பேசி, 044-25246344 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Free training for SC, ST, youth for account management work - District Collector S. Amirtha Jyoti

District Collector S. Amirtha Jyoti said that the youth belonging to Adi Dravidar and Tribal (SC, ST) will be given free training for account management work. In this regard, he announced: Through the Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation (TADCO), Adi Dravidar and tribal youth will be given training in accountancy to work in private banking and financial institutions.

  Candidates who have completed B.A., B.Com., B.Sc.-Mathematics between 22 to 33 years of age and belong to Adi Dravidian tribe can apply for this course. This training will be provided for 20 days. Accommodation and study facilities will be provided at the training institute in Chennai. Trainees who complete this training will be admitted to the training program conducted by the organization. The beneficiaries will be given an approved certificate from the Bank Financial Services Insurance Company. In this job, you can get starting monthly salary of Rs.25,000 to Rs.30,0000.

  You can apply for this training on TADCO website. Total cost of training (including accommodation) will be covered by TADCO. For more details you can approach the office of the District Collector, TADCO on the second floor of the District Collectorate, Chennai. He also said that he can be contacted on 9445029456 and 044-25246344.

No comments:

Post a Comment