மருத்துவ மாணவா் சோ்க்கை விவரங்களை சமா்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - தேசிய மருத்துவ ஆணையம்
நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே பதிவேற்றுவதற்கான அவகாசத்தை வரும் 16-ஆம் தேதி வரை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம்.
நீட் தோ்வு தகுதி அடிப்படையிலும், அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையிலுமே மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும்.
அதன்படி, நிகழாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கான தெரிவுப் பகுதியில் கடந்த 10-ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த அவகாசம் வரும் 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Extension of time for submission of details of medical students - National Medical Commission
The National Medical Commission (NMC) has advised that the deadline for uploading the details of the students admitted to the MBBS course this year is 16th. In this regard, the circular sent by the director of the board of junior medical education of the commission, Sambu Charan Kumar, said: It is necessary that the selection of MBBS students should be carried out transparently as per the guidelines of the National Medical Commission. The selection of students should be conducted on the basis of NEET examination merit and on the basis of sanctioned seats.
Accordingly, it was announced that the details of admitted students, mark details, seat reservation details, fee details etc. should be uploaded in the selection section for medical colleges on the NMC website by the 10th. Now the deadline is being extended till the 16th, the circular advised.
No comments:
Post a Comment