தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் Dry weather likely to prevail in Tamil Nadu today - Chennai Meteorological Center informs - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, January 11, 2023

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் Dry weather likely to prevail in Tamil Nadu today - Chennai Meteorological Center informs

தமிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 

 தமிழகத்தில் உள் மாவட்டங்களில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வடகிழக்கு பருவமழை 12.01.2023 அன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது.

 அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: 11.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. 

12.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். 13.01.2023 முதல் 15.01.2023 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். 

Dry weather likely to prevail in Tamil Nadu today - Chennai Meteorological Center informs

  The Chennai Meteorological Department said that the minimum temperature in the interior districts of Tamil Nadu today is likely to be below normal. A report issued by the Chennai Meteorological Department has said:- Northeast Monsoon is likely to withdraw from Tamil Nadu, Puduwai, Karaikal, adjoining Coastal Andhra Pradesh, Rayalaseema, South Interior Karnataka and Kerala on 12.01.2023.

  Weather forecast and warning for next 5 days: 11.01.2023: Dry weather is likely to prevail over Tamilnadu, Puduwai and Karaikal. Light fog is likely at a few places in the morning. Minimum temperature in interior districts is likely to be 2 to 3 degrees Celsius below normal. Over the hilly areas of Nilgiri district, there is a chance of frost at a couple of places during the night.

12.01.2023: Dry weather is likely to prevail over Tamil Nadu, Puduwai and Karaikal. Light fog is likely at a few places in the morning. Minimum temperature in interior districts is likely to be 2 to 3 degrees Celsius below normal. 13.01.2023 to 15.01.2023: Dry weather may prevail over Tamil Nadu, Puduwai and Karaikal.

Weather Forecast for Chennai and Suburbs: Partly cloudy skies for the next 48 hours. The maximum temperature is likely to be around 29-30 degree Celsius and the minimum temperature is likely to be around 20-21 degree Celsius. Light fog will be seen in the morning.

No comments:

Post a Comment