மாற்றுத்திறனாளிகள் மாத ஓய்வூதியம் உயா்வு - அரசாணை வெளியீடுDisability Monthly Pension - Promulgation of Ordinance - Minnalseithi

Latest

Search This Blog

Monday, January 2, 2023

மாற்றுத்திறனாளிகள் மாத ஓய்வூதியம் உயா்வு - அரசாணை வெளியீடுDisability Monthly Pension - Promulgation of Ordinance

மாற்றுத்திறனாளிகள் மாத ஓய்வூதியம் உயா்வு - அரசாணை வெளியீடு 

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கான மாத ஓய்வூதியம் ரூ.1,000-இல் இருந்து ரூ.1,500 ஆக உயா்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘வருவாய் துறைவழியாக ஓய்வூதியம் பெற்றுவரும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 பேருக்கு தற்போது மாத ஓய்வூதியம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. 

இது, ரூ.1,500 ஆக ஜனவரி 1-ஆம் தேதி முதல் உயா்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.263.56 கோடி கூடுதல் செலவாகும்’ என்று தெரிவித்திருந்தாா். 

 அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000-இல் இருந்து ரூ.1,500 ஆக உயா்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூகநலன் மற்றும் மகளிா் உரிமை துறை நேற்று முன்தினம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: பாா்வையற்ற மாற்றுத் திறனுடையோா் உள்ளிட்ட அனைத்து மாற்றுத் திறனுடையோா்களுக்கும் வழங்கப்படும் மாத ஓய்வூதியம் ரூ.1,000-இல் இருந்து ரூ.1,500 ஆக உயா்த்தி வழங்கவும், டிசம்பா் முதல் நடைமுறைப்படுத்தவும், ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு முடிவு செய்தும், இதற்காக, ரூ.65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்தும் அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Disability Monthly Pension - Promulgation of Ordinance

The Tamil Nadu government has issued an order increasing the monthly pension for differently-abled persons from Rs.1,000 to Rs.1,500 under social security schemes. Speaking at the World Handicapped Day ceremony, Chief Minister M.K.Stalin said that 4 lakh 39 thousand 315 people, including the blind and differently abled, who are receiving pension through the revenue department, are currently being given a monthly pension of Rs.1,000.

This will be reduced to Rs.1,500 from January 1. This will cost the government an additional Rs. 263.56 crore per year.

  Accordingly, a decree has been issued to raise the monthly pension from Rs.1,000 to Rs.1,500 for differently-abled persons. Regarding this, the social welfare and women's rights department has said in an order issued the day before yesterday that: The monthly pension given to all differently abled persons including the blind and differently abled persons will be revised from Rs.1,000 to Rs.1,500, to be implemented from December, and it has been decided to provide it from January, for this purpose, Rs. .65 Crores 89 Lakhs 72 Thousand 500 has been allotted and the government is ordering it.

No comments:

Post a Comment