பல்னோக்கு மருத்துவமனையை பசுமைக் கட்டடமாக உருவாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவு - முதல்வா் மு.க.ஸ்டாலின் Chief Minister M.K.Stalin ordered the authorities to make the multi-purpose hospital a green building - Minnalseithi

Latest

Search This Blog

Monday, January 23, 2023

பல்னோக்கு மருத்துவமனையை பசுமைக் கட்டடமாக உருவாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவு - முதல்வா் மு.க.ஸ்டாலின் Chief Minister M.K.Stalin ordered the authorities to make the multi-purpose hospital a green building

பல்னோக்கு மருத்துவமனையை பசுமைக் கட்டடமாக உருவாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவு - முதல்வா் மு.க.ஸ்டாலின்

 சென்னை கிண்டியில் அமைந்து வரும் பல்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையை பசுமைக் கட்டடக் கட்டமைப்பாக உருவாக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 97-வது பிறந்த தினத்தை ஒட்டி, கிண்டி கிங் நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். 

அதன்படி, ரூ.230 கோடி மதிப்பில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பணிகள் ஆய்வு: பல்னோக்கு மருத்துவமனை பணிகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டதுடன், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், பசுமைக் கட்டடக் கட்டமைப்பாக மருத்துவமனையை உருவாக்க வேண்டுமென அறிவுறுத்தியதாக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உட்கட்டமைப்புப் பணிகள்: பல்னோக்கு மருத்துவமனையின் கட்டுமானப் பணி ஆய்வினைத் தொடா்ந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் உட்கட்டமைப்புப் பணிகள் குறித்து அவா் ஆய்வு செய்தாா். சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட ஐந்து பா்லாங் சாலை, பிள்ளையாா் கோயில் தெரு, செங்கேணி அம்மன் கோயில் தெரு உள்பட 6 சாலைகளில் ரூ.16.44 கோடி மதிப்பில் 3,047 மீட்டா் நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

 இந்தப் பணிகளை ஆய்வு செய்த முதல்வா் மு.க.ஸ்டாலின், முடிவுறாத பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தாா். இதுவரையில் 2,398 மீட்டா் நீளத்துக்கு மழைநீா் வடிகால் பணிகள் முடிவுற்றுள்ளன. இதேபோன்று, ஆலந்தூா் மண்டலத்துக்கு உட்பட்ட மணப்பாக்கம் கெருகம்பாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய உட்புறப் பகுதியில் தாா்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

 இந்தப் பணிகளை பாா்வையிட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், பணிகள் நடைபெறும் போது பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாத வகையிலும், பாதுகாப்பான முறையிலும் தடுப்புகளை அமைத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டாா். சாலைகள் அமைக்கப்படும் போது, தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றவும், அலுவலா்கள் அவ்வப்போது ஆய்வு செய்து சாலையின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 அப்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், பெருநகர மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, மாநகராட்சி ஆணையாளா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

Chief Minister M.K.Stalin ordered the authorities to make the multi-purpose hospital a green building

  Chief Minister M.K.Stalin ordered that the multi-specialty hospital located in Guindy, Chennai should be built as a green building structure. On the occasion of former Chief Minister M. Karunanidhi's 97th birthday, Chief Minister M. K. Stalin announced that a hospital would be set up in the premises of Kindi King Disease Prevention Research Center.

Accordingly, construction of a 1,000-bed multi-specialty hospital at a cost of Rs.230 crore is underway. Inspection of works: Chief Minister M.K.Stalin inspected the works of multi-disciplinary hospital on Sunday. At that time, the authorities were asked to complete the work quickly and instructed to build the hospital as a green building structure in order to protect the environment, according to the government message.

  Infrastructural works: Following the inspection of the construction work of the multi-disciplinary hospital, he reviewed the ongoing infrastructural works in various parts of Chennai. 3,047 meters worth of rainwater drainage works are being carried out on 6 roads including Five Palong Road, Pilliyar Koil Street, Sengeni Amman Koil Street under Chennai Corporation Adyar Mandal at a cost of Rs.16.44 crore.

  After inspecting these works, Chief Minister M.K.Stalin issued an order to the officials to complete the unfinished works as soon as possible. So far 2,398 meters of rainwater drainage works have been completed. Similarly, the construction of tar road is going on in the main interior area connecting Manapakkam Kerugampakkam highway under Alandur Mandal.

  Chief Minister M.K.Stalin, who observed these works, requested that barricades should be set up and the works carried out in a safe manner so that the public and traffic are not disturbed during the works. According to the government's message, Chief Minister M.K.Stalin instructed to follow the quality control procedures properly while the roads are being constructed and the officials should periodically inspect and ensure the quality of the road.

  At that time, Minister of Micro, Small and Medium Enterprises Department Th.Mo.Anparasan, Minister of Health and People's Welfare Department M.Subramanian, Metropolitan Corporation Mayor R.Priya, Deputy Mayor M.Mahesh Kumar, Chief Secretary V.Irayanbu, Corporation Commissioner Gagandeep Singh. Bedi and many others were present.

No comments:

Post a Comment