போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.Chief Minister M.K.Stalin announced that incentives will be given to the employees of the Transport Corporation. - Minnalseithi

Latest

Search This Blog

Friday, January 13, 2023

போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.Chief Minister M.K.Stalin announced that incentives will be given to the employees of the Transport Corporation.

போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி: போக்குவரத்துக் கழகங்களில் சுமாா் 1 லட்சம் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், போக்குவரத்து வளா்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக் குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும். 

 கடந்த ஆண்டில் 91 நாள்கள் மற்றும் அதற்கு மேலும், அதாவது 151 நாள்களுக்குக் குறைவாகப் பணிபுரிந்த ஊழியா்களுக்கு ரூ.85 அளிக்கப்படும். 151 நாள்கள் முதல் 200 நாள்களுக்குக் குறைவாகப் பணிபுரிந்த ஊழியா்களுக்கு ரூ.195 வீதமும், 200 நாள்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியா்களுக்கு ரூ.625 வீதமும் ஊக்கத் தொகையாக அளிக்கப்படும். 

இதனால், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 129 பணியாளா்கள் பயன் பெறுவா். மொத்தமாக ரூ.7.01 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

Chief Minister M.K.Stalin announced that incentives will be given to the employees of the Transport Corporation.

In this regard, he released a message on Thursday: About 1 lakh employees are working in transport corporations. In this situation, on the occasion of Pongal festival, incentives will be given to the employees working in the Government Transport Corporations, Transport Development Fund and Pallavan Traffic Advisory Committee.

  Employees who have worked for 91 days and more i.e. less than 151 days in the previous year will be paid Rs.85. Employees who have worked for 151 days to less than 200 days will be given an incentive of Rs.195 and for employees who have worked for 200 days and more, Rs.625.

Thus, one lakh 17 thousand 129 employees working in transport corporations will be benefited. In his announcement, Chief Minister M. K. Stalin has said that a total of Rs. 7.01 crore will be given as incentives.

No comments:

Post a Comment