தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு Chance of rain in coastal districts of Tamil Nadu today - Minnalseithi

Latest

Search This Blog

Monday, January 23, 2023

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு Chance of rain in coastal districts of Tamil Nadu today

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு 

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் திங்கள் கிழமை (ஜன.23) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப்பட்ட அறிவிப்பு: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

 உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவுகிறது. 

 சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chance of rain in coastal districts of Tamil Nadu today

The Chennai Meteorological Department has informed that there is a chance of rain in the coastal districts of Tamil Nadu on Monday (Jan. 23) due to the variation in the speed of the east wind.

  In this regard, the announcement issued by the Meteorological Department on Sunday: Due to variation in the speed of easterly winds, there may be light to moderate rains in coastal districts of Tamil Nadu, adjoining districts and Puducherry and Karaikal areas.

  There is a chance of light fog in the early morning at a few places in the interior districts. Over the hilly areas of Nilgiri district, there is a chance of frost at a couple of places during the night. Northern weather prevails in Puducherry and Karaikal.

  As for Chennai, the sky will remain partly cloudy for the next 48 hours. Light rain may occur at a few places. The maximum temperature is expected to be around 30-31 degree Celsius and the minimum temperature is expected to be around 22-23 degree Celsius.

No comments:

Post a Comment