தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புChance of moderate rain in coastal districts of Tamil Nadu - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, January 24, 2023

தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புChance of moderate rain in coastal districts of Tamil Nadu

தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர மாவட்டங்களில், வரும், 27ம் தேதி வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை நிலவரப்படி, கோவை, கடலுார், திருப்பத்துார், நாகை, திருச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம், வேலுார் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில், காலை நேர வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகம் பதிவாகி உள்ளது.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென் மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், மிதமான மழை பெய்யும். 

 தமிழக கடலோரம் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், நாளை முதல், 27ம் தேதி வரை மிதமான மழை பெய்யும். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 30 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், வரும், 26ம்தேதி வரை மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

Chance of moderate rain in coastal districts of Tamil Nadu

It has been announced that there is a possibility of moderate rain in the coastal districts of Tamil Nadu till the 27th. As of yesterday morning, Coimbatore, Cuddalore, Tirupattur, Nagai, Trichy, Thiruvallur, Ramanathapuram, Vellore and Karaikal districts recorded 3 degrees Celsius higher than normal in the morning. , moderate rain.

  Tamil Nadu coastal and adjoining districts will receive moderate rain from tomorrow till 27th. In Chennai, the sky will be overcast. A maximum temperature of 30 degrees Celsius was recorded. Cyclonic winds of 55 km/hr will prevail over South Andaman and adjoining Southeast Bay of Bengal till 26th. Therefore, fishermen should not visit these areas.

No comments:

Post a Comment