பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்...
சென்னை : தனி தேர்வர்கள், பிளஸ் 2 பொது தேர்வு எழுத விண்ணப்ப பதிவுக்கு, இன்றும், நாளையும் கூடுதல் அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச்சில் நடக்கின்றன. இதில், பள்ளி மாணவர்களின் விபரங்களை, அரசு தேர்வுத்துறை ஏற்கனவே சேகரித்துள்ளது. தனி தேர்வர்களிடம் தனியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.
அறிவிக்கப்பட்ட கால அவகாசத்தில், தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனி தேர்வர்களுக்கு, கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்கள், சிறப்பு அனுமதிக்கான தத்கல் திட்டத்தில், சிறப்பு கட்டணம் செலுத்தி, இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.
அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின் சேவை மையங்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 1,000 ரூபாய்; 10ம் வகுப்புக்கு, 500 ரூபாயும் சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு கட்டண விபரம், தேர்வர்களுக்கான விதிகள், சேவை மையங்களின் விபரங்கள் உள்ளிட்ட வற்றை, www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Additional time to apply for public exam...
Chennai: Additional dates have been announced today and tomorrow for individual candidates, plus 2 general examination application registration.
In Tamil Nadu, Class 10th, Plus 1, Plus 2 public exams are held in March. In this, the government examination department has already collected the details of the school students. Separate applications are received from individual candidates.
Additional time has been given to individual candidates who failed to apply for the examination within the notified period.
According to this, the individual candidates who want to appear for Class 10th, Plus 1 and Plus 2 public examination can apply for Tatkal scheme for special admission by paying a special fee and apply today and tomorrow, Government Examination Department Director Sethurama Verma has announced.
Apply through the Service Centers of the Directorate of Government Examinations. In addition to the examination fee, for Plus 1, Plus 2, INR 1,000; For Class 10th, a special fee of Rs.500 is also payable.
Details of exam fees, rules for candidates, details of service centers can be found on the website www.dge1.tn.gov.in.
No comments:
Post a Comment