அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை கடிதங்களை வழங்கிய பிரதமர்The Prime Minister issued appointment letters to 71,000 new people in various departments of the government - Minnalseithi

Latest

Search This Blog

Friday, January 20, 2023

அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை கடிதங்களை வழங்கிய பிரதமர்The Prime Minister issued appointment letters to 71,000 new people in various departments of the government

அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை கடிதங்களை வழங்கிய பிரதமர்

அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். பணி நியமன ஆணைகளை வழங்கிய அவர் காணொலி வாயிலாக அவர்களிடம் உரையாடினார். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மெகா வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மெகா வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

 இது குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அதிக அளவிலான வேலைவாய்ப்பினை உருவாக்க நினைக்கும் பிரதமரின் ஈடுபாட்டினுடைய ஒரு படிநிலையே இந்தப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்வாகும். இந்த மெகா வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேலும் பல்வேறு வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட உள்ளது.

 இதன்மூலம் நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும். நாடு முழுவதிலிருந்தும் இளநிலை பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கண்காணிப்பாளர்கள், காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற பல்வேறு துறைகளுக்கு பலரும் புதிதாக பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Prime Minister issued appointment letters to 71,000 new people in various departments of the government

Prime Minister Narendra Modi issued appointment orders to 71,000 newly selected people for various departments and organizations of the government. He gave the appointment orders and spoke to them through video. As part of the mega employment scheme announced last year, 71 thousand people have been given employment orders. It was announced that 10 lakh jobs will be created under this mega employment scheme.

  In this regard, the Prime Minister's Office has informed that: The issue of appointment orders is a step of the Prime Minister's involvement in creating high levels of employment. Under this mega employment scheme, more and more jobs are going to be created for the youth.

  Thus, the role of youth in the development of the country will be very important. It has been reported that many new recruits have been made from all over the country in various fields such as Junior Engineers, Technicians, Superintendents, Police Officers, Doctors, Nurses and Teachers.

No comments:

Post a Comment