5 லட்சம் போலி பதிவுகள்ஆதார்' இணைப்பில் நீக்கம்5 lakh fake records removed from Aadhaar link - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, January 24, 2023

5 லட்சம் போலி பதிவுகள்ஆதார்' இணைப்பில் நீக்கம்5 lakh fake records removed from Aadhaar link

5 லட்சம் போலி பதிவுகள்ஆதார்' இணைப்பில் நீக்கம்


தமிழகம் முழுதும் மின் நுகர்வோரின் இணைப்பு எண்ணுடன், 'ஆதார்' எண் இணைக்கும் பணியை, 100 சதவீத முடித்ததில், தேனி மின் பகிர்மான வட்டம் முதலிடத்தை பிடித்து உள்ளது. தமிழக மின் வாரியம், 44 மின் பகிர்மான வட்டங்களாக செயல்படுகிறது. இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் வீடுகள், குடிசை வீடுகள், விவசாயம், விசைத்தறி பிரிவுகளை சேர்ந்த, 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணி, நவ., 15ம் தேதி துவக்கப்பட்டது. ஆதார் இணைக்க, இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. நேற்று வரை, 2.10 கோடி நுகர்வோர்கள் இணைத்துள்ளனர். 

அதில், தேனி பகிர்மான வட்டத்தில், 48 லட்சம் நுகர்வோரும் 100 சதவீதம் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதையடுத்து, 100 சதவீதம் ஆதார் எண் இணைத்ததில், தேனி பகிர்மான வட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்காக, அதன் மேற்பார்வை பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர் மற்றும் ஊழியர்களை, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி பாராட்டியுள்ளார். 

 சில வீட்டு உரிமையாளர்கள், மின் இணைப்பில் உள்ள நபரின் ஆதார் எண்ணை இணைக்காமல், வேறு நபர்களின் ஆதாரை இணைத்துஉள்ளனர். அதை மின் வாரியம் சரிபார்த்ததில், 4.85 லட்சம் பேர் போலியாக ஆதார் பதிவு செய்திருப்பதை கண்டறிந்து, அந்த பதிவுகளை நீக்கியுள்ளது. அவர்களின் பதிவு செய்த மொபைல் போன் எண்களுக்கு சரியான ஆதாரை இணைக்குமாறு, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டு உள்ளது.

5 lakh fake records removed from Aadhaar link


Theni Power Distribution Circle has stood first in 100 percent completion of the task of linking 'Aadhaar' number with the connection number of electricity consumers across Tamil Nadu. Tamil Nadu Electricity Board operates in 44 Electricity Distribution Circles. The process of linking Aadhaar number with the electricity connection number of 2.67 crore consumers belonging to free and subsidized electricity supply houses, cottages, agriculture and powerloom sectors was started on 15th November. Aadhar linking has been given till 31st of this month. As of yesterday, 2.10 crore consumers have connected.

Out of which, 48 lakh consumers in Theni distribution circle have 100 percent linked Aadhaar number. Accordingly, Theni Paharmana Circle has been ranked first in 100 percent Aadhaar number linking. For this, Power Board Chairman Rajesh Lakhani praised its Superintending Engineer, Executive Engineers, Assistant Executive Engineers, Assistant Engineer and staff.

  Some house owners are not linking the Aadhaar number of the person in the electricity connection but linking the Aadhaar number of other people. On verification, the E-Board found that 4.85 lakh people had registered fake Aadhaar and deleted those registrations. An SMS has been sent to their registered mobile phone numbers asking them to link the correct Aadhaar.

No comments:

Post a Comment