மே 5ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்... - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, January 31, 2023

மே 5ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்...

மே 5ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்..

 தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், மார்ச்சில் நடக்க உள்ளது. பத்தாம் வகுப்புக்கு, ஏப்ரல், 6 முதல், 20 வரையிலும்; பிளஸ் 1க்கு, மார்ச், 14 முதல், ஏப்ரல், 5 வரையிலும்; பிளஸ் 2வுக்கு, மார்ச், 13 முதல், ஏப்ரல், 3 வரையிலும், பொதுத் தேர்வுகள் நடக்கின்றன. 

 மார்ச், 13ல் துவங்கி, ஏப்ரல், 20ல் அனைத்து பொதுத் தேர்வுகளும் முடிவடைகின்றன. இந்நிலையில், பொதுத் தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில், நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தலைமை வகித்தார்.

 பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா ஆகியோர் பங்கேற்று, பொதுத் தேர்வை நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, வழிகாட்டுதல் வழங்கினர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி: பொதுத் தேர்வை எந்த பிரச்னையுமின்றி சுமூகமாக நடத்தும் வகையில், முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியும் இறுதி செய்யப்பட்டு உள்ளது. பிளஸ் 2வுக்கு, மே, 5ல் முடிவுகள் வெளியிடப்படும். பத்தாம் வகுப்புக்கு மே, 17; பிளஸ் 1க்கு, மே, 19ம் தேதி தேர்வு முடிவு வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, வினாத்தாளின் தன்மையை புரிய வைக்கும் வகையில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் தயாரிக்கப்படும் புத்தகங்களையும், பழைய வினாத் தாள்களையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

 Plus 2 exam results on May 5.. 

 In Tamil Nadu, Class 10th, Plus 1 and Plus 2 public exams are going to be held in March. For Class X, from April 6 to 20; For Plus 1, from March 14 to April 5; For Plus 2, public examinations are held from March 13 to April 3. 

 All general exams start on March 13 and end on April 20. In this case, yesterday, a consultation meeting was held at Chennai Anna Nuatandu Nulak Arena regarding the preparations for the public examinations. School Education Minister Mahesh presided. 

 School Education Principal Secretary Kakarla Usha, Commissioner Nandakumar, Director of Examination Sethurama Verma participated and gave guidance to Principal Education Officers and District Education Officers regarding the progress of conducting the public examination. Subsequently, in an interview given by the Minister of School Education, Mahesh: Steps have been taken to conduct the general examination smoothly without any problem. The date of publication of the exam results has also been finalised. For Plus 2, the results will be released on May 5. May, 17 for Class X; For Plus 1, the exam result is scheduled to be released on May 19. 

 Arrangements have been made to provide books and old question papers prepared by the Parent Teacher Association to the public examination students so that they can understand the nature of the question paper. This is what he said.

No comments:

Post a Comment