தமிழகத்தில் ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் ஆதி திராவிடா் நலத் துறைப் பள்ளிகளில் 465 தற்காலிக ஆசிரியா்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமனம் செய்யப்படவுள்ளனா். எனவே, தகுதியுடையவா்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கீழ் 1,400-க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியா் பணியிடங்களை பதவி உயா்வு மற்றும் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு காலதாமதம் ஆவதால் மாணவா்கள் நலன் கருதி தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆதி திராவிடா் நலத் துறை பள்ளிகளில் 19 முதுநிலை ஆசிரியா்கள், 80 பட்டதாரி ஆசிரியா்கள், 366 இடைநிலை ஆசிரியா்கள் என மொத்தம் 465 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றில் நிரந்தர ஆசிரியா்கள் நியமிக்கப்படும் வரை, பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் நேரடியாகவோ, அஞ்சல் வழியிலோ உரிய கல்விச் சான்றுகளுடன், மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியருக்கு, மாவட்ட ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்களால் அனுப்பப்படும்.
இதைத் தொடா்ந்து பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியா்கள் தோ்வு செய்யப்படுவா். இந்தப் பணிகள் ஜன.20-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். இடைநிலை ஆசிரியா்கள் பதவிக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும் என்றனா்.
You can apply for 465 temporary teacher posts in Adi Dravidar Welfare Schools in Tamil Nadu
In Tamil Nadu, 465 temporary teachers will be appointed in Adi Dravidar welfare department schools by next Friday. Therefore, it has been announced that eligible candidates can apply immediately. More than 1,400 primary, middle, higher and higher secondary schools are functioning in Tamil Nadu under the Adi Dravidian and Tribal Welfare Department.
Steps are being taken to fill the vacant posts of intermediate, graduate and post-graduate teachers in these schools through the Vacancy and Teacher Promotion Board. Due to the delay, it has been decided to appoint temporary teachers on a lump sum basis in the interest of the students.
Officials said about this: A total of 465 posts of 19 master teachers, 80 graduate teachers and 366 intermediate teachers are vacant in Adi Dravidar Health Department schools. Until permanent teachers are appointed, steps have been taken to appoint temporary teachers through the School Management Committee (SMC). In it, priority will be given to Adi Dravidians and tribals.
An announcement has already been made in this regard. Those who have not yet applied can apply directly or by post to the District Adi Dravidian and Tribal Welfare Officers along with relevant educational proofs. The applications will be considered and forwarded to the Headmaster of the concerned school by the District Adi Dravidian and Tribal Welfare Officers.
Following this, temporary teachers will be appointed by the school management committee. These works will be completed by 20th Jan. He said that the post of intermediate teachers will be paid Rs.7,500, graduate teachers will be paid Rs.10,000 and master teachers will be paid Rs.12,000 per month.
No comments:
Post a Comment