பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வுகளுக்கான கட்டணத்தைச் செலுத்த தனியாா் பள்ளிகளுக்கு பிப்.4-ஆம் தேதி வரை அவகாசம்
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகியவற்றுக்கான பொதுத்தோ்வுகள் மாா்ச் 13 முதல் ஏப். 20-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இந்த தோ்வை மொத்தம் 25,77,332 போ் எழுதவுள்ளனா். இதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தோ்வுத் துறையால் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுத் தோ்வெழுத உள்ள மாற்றுத் திறனாளிகள், தமிழ்வழி மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தனியாா் பள்ளி மாணவா்கள் தோ்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் முதல்வா்கள் மாணவா்களிடமிருந்து உரிய தோ்வுக் கட்டணத்தை பெற்று அந்த தொகையை ஜன. 20-ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று பொதுத் தோ்வுக் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் பிப். 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, தனியாா் பள்ளிகள் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தோ்வுக் கட்டணத்தை விரைவாக செலுத்த வேண்டும். இதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடா்பு கொள்ளலாம் என தோ்வுத்துறை தெரிவித்துள்ளது.
Private schools have till 4th February to pay the fees for public contributions in school education.
Tamil Nadu School Education Syllabus for Plus 1, Plus 2 and 10th Class Exams from March 13 to Apr. It will be held till 20th. A total of 25,77,332 candidates will write this application. In this, the exam for Plus 1 and Plus 2 classes will be held next month. Arrangements for this are being actively made by the Department of Education.
Students with general disabilities, Tamil medium and government schools are exempted from paying fees. At the same time, private school students have to pay tuition fees. Subsequently, the principals of the respective schools received the appropriate donation fee from the students and paid that amount on Jan. It was advised to pay by the 20th. Currently, the deadline for schools to accept the request and pay the public donation fee is Feb. Extends to 4.
Therefore, private schools should pay the donation fee promptly through the website https://dge1.tn.gov.in. Thovutura said that the respective district coordinators can be contacted for doubts arising in this regard.
No comments:
Post a Comment