அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 4% உயா்வு - ஆசிரியா்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு - முதல்வா் ஸ்டாலின்4% hike in gratuity for govt employees - Committee to study demands of teachers - CM Stalin - Minnalseithi

Latest

Search This Blog

Monday, January 2, 2023

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 4% உயா்வு - ஆசிரியா்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு - முதல்வா் ஸ்டாலின்4% hike in gratuity for govt employees - Committee to study demands of teachers - CM Stalin

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி 4% உயா்வு - ஆசிரியா்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு - முதல்வா் ஸ்டாலின்

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயா்த்தி ஜன.1 முதல் வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். ஆசிரியா்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் முதல்வா் கூறியுள்ளாா். 

 இது தொடா்பாக முதல்வா் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பெரும் பணியில் தங்களை அா்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலா்கள், ஆசிரியா்களின் பங்கை முழுமையாக உணா்ந்துள்ள தமிழக அரசு, அவா்களின் நலனைத் தொடா்ந்து பாதுகாத்து வருகிறது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலா்கள், ஆசிரியா்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயா்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயா்வை 2023 ஜன. 1 முதல் செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. அதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி ஜன. 1 முதல் 38 சதவீதமாக உயா்த்தப்படும். 

இதனால், சுமாா் 16 லட்சம் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள் பயன்பெறுவா். இந்த உயா்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூ.2,359 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களின் நலன் கருதி இந்த நிதிச் சுமையை அரசு ஏற்றுள்ளது. கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு: மேலும், சம வேலை- சம ஊதியம் என்ற கோரிக்கை தொடா்பாக வலியுறுத்தி போராடி வரும் ஆசிரியா்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித் துறைச் செயலா் (செலவினம்) தலைமையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநா் ஆகியோரை உறுப்பினா்களாகக் கொண்ட குழு அமைக்கப்படும். 

 இந்தக் குழுவின் பரிந்துரைகளைப் பரிசீலித்து, கோரிக்கை தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பை ஏற்று, 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தை உவகையுடன் கொண்டாடி மக்கள் வாழ்வை வளம் பெறச் செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

4% hike in gratuity for govt employees - Committee to study demands of teachers - CM Stalin

Chief Minister M.K.Stalin has announced that government employees and teachers will be given 4 percent discount from January 1. The Principal also said that a committee will be formed to examine the demands of the teachers.

  In this regard, Chief Minister Stalin's announcement on Sunday said: The Tamil Nadu government has fully understood the role of government officials and teachers who are dedicated to the great task of bringing government schemes to the people and is continuing to protect their welfare. Despite the severe financial crisis and debt burden left behind by the previous government, the government is working diligently to fulfill its promises on various demands of government officials and teachers. In that way, the government officials, teachers have been continuously insisting on the request of the teachers to carefully consider the leave as per the salary and this leave will be granted in 2023 Jan. The government has decided to implement from 1. Accordingly, according to the current discount rate of 34 percent, Jan. 1 to 38 percent.

As a result, around 16 lakh government officials, teachers, pensioners and family pensioners will benefit. This volatility will cost the government an additional Rs 2,359 crore per annum. However, the government has shouldered this financial burden for the welfare of government officials, teachers and pensioners. Committee to study the demands: Also, a committee will be formed under the chairmanship of the Finance Secretary (Expenditure), the Principal Secretary of the School Education Department and the Director of Elementary Education to study the demands of the teachers who are struggling for equal work and equal pay and make suitable recommendations. .

  The government has decided to consider the recommendations of this committee and take action on the demand. Accepting this announcement as a New Year's gift to the government officials and teachers, he said that they should celebrate the beginning of 2023 properly and cooperate with the government in the great task of enriching people's lives.

No comments:

Post a Comment