அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு3-ம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகம்
பள்ளிகள் திறப்பு தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த மாதம் 23-ந் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கூடங்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டன.
இதனால் ஏற்கனவே உறவினர்கள் வீட்டுக்கு வெளியூர் சென்றிருந்தவர்கள் கடந்த 2 நாட்களாக வீடுகளுக்கு திரும்பினார்கள்.
அரசு பள்ளிக்கூடங்களில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 5-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பாடப்புத்தகங்கள் வினியோகம் இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையும், தனியார் பள்ளிக்கூடங்களில் யு.கே.ஜி. முதல் பிளஸ்-2 வரையும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
காலையிலேயே மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர்.
அரசு பள்ளிக்கூடங்களில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-ம் பருவ பாடப்புத்தகங்களும், பாட நோட்டுகளும் வழங்கப்பட்டது. அரசு தொடக்க பள்ளிக்கூடங்கள் 5-ந் தேதி திறக்கப்பட்டதும் மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
School opening after half term vacation 3rd term textbooks distribution
Opening of schools The half-yearly examination for students studying in government, government-aided and private schools in Tamil Nadu was completed on 23rd of last month. After that the students were given a holiday. In this situation, the schools opened as usual yesterday after the half-year vacation.
As a result, those who had already gone to their relatives' homes, returned to their homes in the last 2 days. It has been announced that the schools will be opened on the 5th for the students studying in the government schools from 1st to 5th standard.
Distribution of textbooks Currently in Erode district government schools from Class 6 to Plus-2 and UKG in private schools. Schools were opened for students studying from First to Plus-2.
In the morning, the students went to school enthusiastically. Students studying in government schools from 6th to 9th standard were given 3rd term textbooks and course notes.
Officials of the school education department said that when the government primary schools open on the 5th, note books will be given to the students.
No comments:
Post a Comment