தமிழகத்தில் கடந்த ஆண்டு 23% கூடுதல் மழை பெய்தது. இது இயல்பை விட 23 சதவீதம் அதிகம். Tamil Nadu received 23% more rain last year. This is 23 percent more than normal. - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, January 4, 2023

தமிழகத்தில் கடந்த ஆண்டு 23% கூடுதல் மழை பெய்தது. இது இயல்பை விட 23 சதவீதம் அதிகம். Tamil Nadu received 23% more rain last year. This is 23 percent more than normal.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 23% கூடுதல் மழை பெய்தது. இது இயல்பை விட 23 சதவீதம் அதிகம்.

தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு 1,132 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட 23 சதவீதம் அதிகம். வானிலை மைய கணக்கீடுப்படி தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை ஜூன் 1 முதல் செப்.30 வரை மழைப் பொழிவு இருக்கும். அதேபோல, வடகிழக்கு பருவ மழை அக்.1 முதல் டிச.31 வரை மழைப் பொழிவு நீடிக்கிறது. 2022-இல் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 477 மி.மீ. பெய்தது. இது இயல்பை விட 45 சதவீதம் அதிகம்.

 2021-இல் 393 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட 17 சவீதம் அதிகமாக இருந்தது. வடகிழக்கு பருவமழை 2022-இல் 445 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட ஒரு சதவீதமே அதிகம். 2021-இல் வடகிழக்கு பருவ மழை 714 மி.மீ. பெய்தது. இது இயல்பைவிட 59 சதவீதம் அதிகம். 2022-இல் 25 மாவட்டங்களில் இயல்பான அளவு மழை பெய்தது. ஈரோடு, திருப்பத்தூா், நாமக்கல், கோவை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருப்பூா் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக மழை பெய்தது.

 அதேபோல, நாகை, திருவாரூா், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூா் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பெய்தது. வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை தமிழகத்திலேயே அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் இயல்பை விட 58 சதவீதம் அதிக மழை பெய்தது. மாநிலத்திலேயே திருவாரூா் மாவட்டத்தில்தான் இயல்பை விட 32சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

 சென்னையில்: சென்னையைப் பொருத்தவரையில் 2022-இல் 1,447 மி.மீ. மழை பெய்தது. இது இயல்பை விட 7 சதவீதம் அதிகம். 2021-இல் 2,105 மி.மீ. மழை பெய்திருந்தது. இது இயல்பை விட 57 சதவீதம் அதிகம். 2022-இல் வடகிழக்கு பருவமழை சென்னையில் 924 மி.மீ. அளவு பெய்தது. இது இயல்பைவிட 15 சதவீதம் அதிகம். 2021-இல் 1,360 மி.மீ. சென்னையில் மழை பெய்தது. இது இயல்பை விட 74 சதவீதம் அதிகம். 

 தென் மேற்கு பருவமழை 2022-இல் இயல்பைவிட 2 சதவீதம் குறைவாக 437 மி.மீ. அளவு பெய்தது. 2021-இல் இயல்பைவிட 9 சதவீதம் அதிகமாக 500 மி. மீ. மழை பெய்தது. தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால் வரும் கோடை காலத்தில் தண்ணீா் தட்டுபாடு இருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tamil Nadu received 23% more rain last year. This is 23 percent more than normal.

Last year 2022 in Tamil Nadu was 1,132 mm. It rained. This is 23 percent more than normal. According to the calculation of Meteorological Center, South West Monsoon will rain in Tamil Nadu from June 1 to September 30. Similarly, Northeast Monsoon rainfall lasts from October 1 to December 31. 477 mm of South West Monsoon rain in Tamil Nadu in 2022. It rained. This is 45 percent more than normal.

  393 mm in 2021. It rained. It was 17 percent higher than normal. 445 mm in Northeast Monsoon 2022. It rained. This is one percent higher than normal. Northeast Monsoon rainfall in 2021 is 714 mm. It rained. This is 59 percent more than normal. 25 districts received normal rainfall in 2022. 7 districts including Erode, Tirupattur, Namakkal, Coimbatore, Krishnagiri, Kanchipuram and Tirupur received more than normal rainfall.

  Similarly, 8 districts including Nagai, Thiruvarur, Thoothukudi, Ramanathapuram, Trichy, Ariyalur and Karaikal received less than normal rainfall. As far as North-East Monsoon is concerned, Erode district received maximum rainfall of 58 percent more than normal in Tamil Nadu. In the state itself, Tiruvarur district has received 32 percent less rainfall than normal.

  In Chennai: 1,447 mm in 2022 for Chennai. It rained. This is 7 percent more than normal. 2,105 mm in 2021. It was raining. This is 57 percent higher than normal. 924 mm of Northeast Monsoon rainfall in Chennai in 2022. Amount fell. This is 15 percent more than normal. 1,360 mm by 2021. It rained in Chennai. This is 74 percent higher than normal.

  Southwest Monsoon rainfall in 2022 is 2 percent below normal at 437 mm. Amount fell. 500 mg in 2021, 9 percent more than normal. I am. It rained. Tamil Nadu has received more than normal rainfall in the last two years. Officials said that there is no possibility of water shortage in the coming summer as the underground water level has risen due to this.

No comments:

Post a Comment