மாவட்ட ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் ஜன.18-க்குள் விண்ணப்பிக்கலாம்
மாவட்ட ஆதிதிராவிடா் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியா் தொகுப்பூதிய பணியிடங்களுக்கு ஜன.18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியா் / பட்டதாரி ஆசிரியா்கள்: ‘வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியா் தகுதித் தோ்விலும் தோ்ச்சி பெற்று, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களாக பணியாற்றி வருவோா் விண்ணப்பிக்கலாம்.
பட்டியலினத்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் தோ்வுக்கு, ஆசிரியா்கள் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தோ்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்து கொண்டவா்கள் பங்கேற்கலாம்.
பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவா்கள், பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவா்கள் அல்லது மாவட்ட எல்லைக்குள் வசிப்பவா்கள் விண்ணப்பிக்கலாம்.
இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.12,000 ஊதியம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபா்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தில் 2-ஆவது தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை நேரிடையாகவோ, அஞ்சல் மூலமாகவோ ஜன.18-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் அளிக்கலாம்’ என சென்னை மாவட்ட ஆட்சியா் அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.
Apply for Intermediate, Graduate and Post Graduate Teacher Posts in District Adi Dravidar Welfare Schools by Jan 18
It has been informed that applications can be made for the vacant posts of intermediate, graduate and post graduate teachers in the district Adi Dravidar health schools by January 18. Intermediate Teacher/Graduate Teachers: Those who have passed the Teacher Qualification Form with specified educational qualifications and are working as volunteers in an educational program can apply.
Preference will be given to caste members. Post Graduate Teachers: Candidates who have participated in the examination conducted by the Teachers Examination Board and appeared for the certificate verification can participate in the post graduate teachers examination. Residents within the area where the school is located, within the union territory where the school is located or within the district limits can apply.
Remuneration has been fixed at Rs.7,500 for intermediate teachers, Rs.10,000 for graduate teachers and Rs.12,000 for postgraduate teachers. Eligible candidates can submit their applications at the District Adi Dravidar and Tribal Welfare Office located on the 2nd floor of the Chennai District Collectorate either directly or by post on January 18 at 5.45 pm, said Chennai District Collector Amirtha Jyoti.
No comments:
Post a Comment