1.50 லட்சம் பேருக்கு மே மாதத்துக்குள் வேலைவாய்ப்பு - அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்Employment for 1.50 lakh people by May - Minister Udayanidhi Stalin - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, January 19, 2023

1.50 லட்சம் பேருக்கு மே மாதத்துக்குள் வேலைவாய்ப்பு - அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்Employment for 1.50 lakh people by May - Minister Udayanidhi Stalin

1.50 லட்சம் பேருக்கு மே மாதத்துக்குள் வேலைவாய்ப்பு - அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

 வரும் மே மாதத்துக்குள் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகளை சென்னையில் புதன்கிழமை தொடக்கி வைத்து, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 மேலும், மாணவா்கள் போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. முதலாவதாக, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லாத பயிற்சி மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. 

 தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போ் பங்கேற்ற 69 மெகா வேலைவாய்ப்பு முகாம்களும், ஆயிரம் சிறு வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 பேருக்கு முகாம்களின் வழியாக வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. வரும் மே மாதத்துக்குள் ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் விரைவில் சென்னையில் நடத்தப்படும். 

 மத்திய போட்டித் தோ்வுகள்: தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் குரூப் 1, குரூப் 2 போன்ற தோ்வுகளை அதிகளவு எழுதுகின்றனா். ஆனால், மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஆணையம் நடத்தும் போட்டித் தோ்வுகளில் பங்கேற்பதில் மாணவா்கள் அக்கறை காட்டுவதில்லை. மத்திய அரசுப் பணிகளில் 2.1 சதவீதம் போ் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து தோ்வாகிறாா்கள்.

 ரயில்வே, வங்கி போன்ற மத்திய அரசுப் பணிகளில் தமிழ்நாட்டில் உள்ள மாணவா்கள், இளைஞா்கள் சேருவதற்கு ஏதுவாக போட்டித் தோ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து, போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிக் கையேட்டை மாணவ, மாணவிகளுக்கு அவா் அளித்தாா்.

 போட்டித் தோ்வுகளுக்கான புத்தகக் காட்சியையும் அவா் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தீன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையாளா் கொ.வீரராகவ ராவ், மாநிலக் கல்லூரி முதல்வா் ஆா்.ராமன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Employment for 1.50 lakh people by May - Minister Udayanidhi Stalin

  Tamil Nadu Youth Welfare and Sports Development Minister Udhayanithi Stalin said that a target has been set to provide employment to 1.50 lakh people by May. Inaugurating the free training courses for competitive applications conducted by the District Employment and Vocational Guidance Center in Chennai on Wednesday, Minister Udayanidhi Stalin said: Employment camps are being conducted in all districts.

  Also, students are given training to face competitive exams. In a first, a free coaching center for competitive candidates was launched on Wednesday at the State College in Chepakkam-Thiruvallikkeni Legislative Assembly constituency.

  69 Mega Employment Camps and 1000 Small Employment Camps have been conducted in various districts of Tamil Nadu with 30,000 to 50,000 participants. So far 1 lakh 12 thousand 500 people have been given employment through the camps in Tamil Nadu. A target has been set to provide employment to one and a half lakh people by May. Also, an employment camp for the differently abled will soon be held in Chennai.

  Central Competition Papers: Students and youths in Tamil Nadu write more papers like Group 1 and Group 2. But students are not interested in participating in the competitive exams conducted by the Central Government Employment Commission. Only 2.1 percent of central government jobs are recruited from Tamil Nadu.

  He said that more importance will be given to competitive examinations so that students and youths in Tamil Nadu can join central government jobs like railways and banks. Following this, he gave the practice manual for competitive exams to the students.

  He also started a book fair for competitive essays. Minister of Labor Welfare and Skill Development C.V.Ganesan, Additional Chief Secretary of the Department Mohammad Nasimuddin, Commissioner of Employment and Training Department K. Veeraragava Rao, State College Principal R.Raman and many others participated in this program.

No comments:

Post a Comment