10-வது பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம் - Minnalseithi

Latest

Search This Blog

Monday, January 30, 2023

10-வது பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம்

10-வது பிளஸ் 1 , பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி மாற்றம்
 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வை மார்ச் முதல் வாரத்திலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

அதாவது பொதுத்தேர்வு எழுத உள்ள 10-வது பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெறும் எனவும் ஏற்கெனவே மார்ச் 6 முதல் 10 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

பிளஸ் 1 தேர்வு முடிவு மே19ம் தேதியும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும் வெளியிடப்படும். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே மாதம் 17ஆம் தேதி வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜன. 4 ஆம் தேதி வெளியானது. பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

 அதுபோல 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


10th Plus 1, Plus 2 Students Date Change of Procedure Exam


School Education Minister Anbil Mahes Poiyamozhi has said that it is planned to conduct the practical examination for 10th, Plus 1 and Plus 2 students in the first week of March.

 He said that the practical exams for the students of 10th plus 1 and plus 2 classes who are going to write the public examination will be held from 1st to 9th March and it has been decided to hold it early as it was already planned to be held from 6th to 10th March. Plus 1 exam results will be released on May 19 and Plus 2 exam results on May 5. 

Minister Anbil Mahesh has announced that the results of the 10th class examination will be released on May 17. The Plus 2 public examination for the year 2023 will be held from March 13 to April 3. This year 8 lakh people are appearing for the exam. 

Hall Ticket for Plus 2 General Exam Jan. Released on the 4th. The general examination for Plus 1 students will be held from March 14 to April 5. Similarly, the public examination for class 10 students will be held from April 6 to April 20.

No comments:

Post a Comment