'மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழகம் முதலிடம்!' 'Tamil Nadu ranks first in medical student admissions!' - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 4, 2022

'மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழகம் முதலிடம்!' 'Tamil Nadu ranks first in medical student admissions!'

நாட்டிலேயே அதிக மருத்துவ மாணவர் சேர்க்கை, தமிழகத்தில் தான் நடக்கிறது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை மருத்துவ கல்லுாரியில், முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. 

இதில், அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று, மருத்துவ மாணவர்களுக்கான கையேட்டை வெளியிட்டார். பின், அவர் பேசியதாவது: நாட்டிலேயே அதிக மருத்துவ மாணவர் சேர்க்கை, தமிழகத்தில் தான் நடக்கிறது. மொத்தம் உள்ள 10 ஆயிரத்து 825 இடங்களில், அரசு ஒதுக்கீட்டுக்கு மட்டும், 6,143 இடங்கள் உள்ளன. தமிழகத்தில் 37 அரசு மருத்துவ கல்லுாரிகள், 34 தனியார் மருத்துவக் கல்லுாரிகள் என, மொத்தம் 71 என, நாட்டிலேயே அதிகம் உள்ளன. 

 கல்லுாரிகள் எண்ணிக்கையிலும், மாணவர்கள் எண்ணிக்கையிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தென்காசி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம், பெரம்பலுார் ஆகிய, ஆறு மாவட்டங்களில், அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லை. அங்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, அரசு பள்ளி மாணவருக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ், 565 பேருக்கு, எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடம் கிடைத்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லுாரியில் மொத்தம் உள்ள 250 எம்.பி.பி.எஸ்., இடங்களில், 247 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 

 இதில், அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கான, 35 இடங்களில், 24 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இது, வரலாற்று சிறப்புமிக்க ஒன்று. இந்த கல்லுாரியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ், அரசு பள்ளி மாணவர்கள் 16 பேர் சேர்ந்துள்ளனர். அதில், 8 பேர் தமிழ் வழி கல்வியில் படித்தவர்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மருத்துவக் கல்வி இயக்குனர் சாந்திமலர், கல்லுாரி முதல்வர் தேரணிராஜன், துணை முதல்வர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Tamil Nadu has the highest enrollment of medical students in the country,'' said Subramanian, Minister of People's Welfare. A reception for first year medical students was held at Chennai Medical College the day before yesterday. Minister Subramanian participated in this and released a handbook for medical students. Then, he said: Tamil Nadu has the highest enrollment of medical students in the country. Of the total 10,825 seats, there are 6,143 seats for government reservation only. Tamil Nadu has 37 government medical colleges and 34 private medical colleges, totaling 71, which is the highest in the country. 

Tamil Nadu ranks first in terms of number of colleges and number of students. There are no government medical colleges in six districts namely Tenkasi, Mayiladuthurai, Ranipet, Tirupattur, Kanchipuram and Perambalur. Steps have been taken to set up government medical colleges there. A request has been made to the central government. This year, under the 7.5 percent internal quota for government school students, 565 students have got seats in the MPBS course. Out of a total of 250 MBPS seats in Chennai Medical College, students are enrolled in 247 seats. 

Out of 35 seats for all-India quota, 24 are from Tamil Nadu. This is a historic one. Under the 7.5 percent internal quota, 16 government school students are enrolled in this college. Out of them, 8 were educated in Tamil medium. Thus he spoke. Director of Medical Education Santhimalar, College Principal Theranirajan, Vice Principal Kavita and many others participated in the program.

No comments:

Post a Comment