குறுகியகால சர்வதேச பயிற்சி
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு குளோபல் இமெர்ஷன் புரொகிராம் எனும் திட்டத்தின் கீழ், சிங்கப்பூரில் 13 நாட்கள் குறுகிய கால பயிற்சி வழங்கப்படுகிறது.
பங்குபெறும் நிறுவனம் மற்றும் அறிமுகம்:
சிங்கப்பூரில் உள்ள ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தலைமை வளாகத்தை கொண்ட ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம், கடந்த 2003ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் தனது கிளை வளாகத்தை கொண்டுள்ளது.
சர்வதேச தரவரிசையின்படி சிறந்த 300 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.
பிசினஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைக்காலஜி, எஜுகேஷன், சயின்ஸ், காமர்ஸ், அக்கவுண்டிங், அக்குவாகல்ச்சர், என்விரான்மெண்டல் சயின்ஸ், கேம்ஸ் டிசைன், டூரிசம் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி ஆகிய பிரிவுகளில் பல்வேறு படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்குகிறது.
பயிற்சின் முக்கியத்துவம்:
இந்த 13 நாள் பயிற்சியில் பங்குபெறும் மாணவர்களுக்கு லீடர்ஷிப், கொலாப்ரேஷன், கிரியேட்டிவிட்டி, அடாப்டபிலிட்டி, ஈ.க்யூ., மற்றும் கம்யூனிகேஷன் ஆகிய 6 திறன் வளர்ப்பு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இவைதவிர, டெக் இன்னோவேஷன் நிறுவனத்துடன் கலந்துரையாடல், சிறு ஆராய்ச்சி திட்டத்தில் ஈடுபடுதல், ஏ.ஐ., மற்றும் ஐ.ஓ.டி., அனுபவ பயிற்சி, பொருட்காட்சிகளில் பங்குபெறுதல் என பல்வேறு அனுபவத்தை மாணவர்களுக்கு வழங்குகிறது.
தகுதிகள்:
இப்பயிற்சியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சி.இ.ஜி., ஏ.சி.டி., எஸ்.ஏ.பி., மற்றும் எம்.ஐ.டி., ஆகிய கல்லூரி மாணவர்கள் பங்குபெறலாம்.
கட்டணம்:
விமானக் கட்டணம், விசா, உணவு, போக்குவரத்து, இதர செலவுகள் ஆகியவை உட்பட ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் தங்களது துறை தலைவரின் வாயிலாக அண்ணா பலகலைக்கழகத்தின் சர்வதேச உறவு மைய இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
டிசம்பர் 23
விபரங்களுக்கு:
No comments:
Post a Comment