மின் இணைப்பு எண்ணுடன், நேற்று வரை, 51 லட்சம் பேர், 'ஆதார்' எண்ணை இணைத்துள்ள நிலையில், அந்த பணிக்காக, மின் வாரியம் கூடுதலாக, தனி இணையதள முகவரியை வெளியிட்டு உள்ளது.
தமிழக மின் வாரியம், வீடுகளை உள்ளடக்கிய இலவச மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கும் நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன், அவர்களின் ஆதார் எண்ணை இணைத்து வருகிறது.
மின் வாரியத்தின், www.tangedco.gov.in என்ற இணையதளத்திலும், கட்டண மையங்களிலும், ஆதார் எண்ணை இணைக்கலாம்
இதனுடன், பலரும் இணையதளத்தில் மின் கட்டணம் செலுத்துவதுடன், புதிய மின் இணைப்பு, மின் இணைப்புபெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கும் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆதார் எண்ணை இணைக்க மட்டும், https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற இணையதள முகவரியை, மின் வாரியம் நேற்று வெளியிட்டது.
மொத்தம், 2.68 கோடி மின் நுகர்வோரில் நேற்று மாலை வரை, 51 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்
As of yesterday, 51 lakh people have linked their 'Aadhaar' number with their electricity connection number, and for that purpose, the Electricity Board has additionally published a separate website address. The Tamil Nadu Electricity Board is linking the Aadhaar number to the electricity connection number of the consumers who are getting free and subsidized electricity supply including houses. Aadhaar number can be linked on the electricity board's website www.tangedco.gov.in and at the payment centers. Along with this, many people are applying for services like new electricity connection, change of electricity connection name, along with payment of electricity bill on the website. In this case, the electricity board has released the website address https://adhar.tnebltd.org/Aadhaar/ only for linking the Aadhaar number. Out of a total of 2.68 crore electricity consumers, 51 lakh have linked their Aadhaar number with their electricity connection number till last evening..
No comments:
Post a Comment