தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தேனி தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். எனவே, 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள், பிளஸ்-2, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம்.
முகாமிற்கு வருபவர்கள் தங்களின் சுயவிவர நகல், கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
private Employment Camp Theni Theni District Collector Muralitharan has stated in a press release that:- A private employment camp will be held tomorrow (Friday) at 10 am in the office premises of Theni District Employment and Vocational Guidance Centre. The camp is attended by representatives of various private companies in the district and selects people for their companies.
Therefore, those who have completed classes 10th and below, Plus-2, ITI, Diploma and Graduation can participate in the camp. Campers should participate with their profile copy, copies of educational certificates. For more details contact District Employment Office. It says so.
No comments:
Post a Comment