சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில் நாசாவின் செவ்வாய் கிரக விண்கலம் 'ஆபர்ச்சூனிட்டி'யின் மாதிரி கண்காட்சி
சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில் நாசாவின் செவ்வாய் கிரக விண்கலம் ‘ஆபர்ச்சூனிட்டி'யின் மாதிரி கண்காட்சியை மாணவர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. சென்னை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மற்றும் நிர்வாக அமைப்பான நாசாவின் மார்ஸ் ரோவர் 'ஆபர்ச்சூனிட்டி'யின் முழு அளவிலான மாதிரியின் கண்காட்சியானது, சென்னையில் உள்ள அமெரிக்க மையத்தில் கடந்த 8-ந்தேதி (வியாழக்கிழமை) அமெரிக்க துணைத்தூதர் ஜூடித் ரேவினால் திறந்து வைக்கப்பட்டது.
அப்போது, இந்தியாவிற்கான புல்பிரைட்-நேரு திட்ட அறிஞர் வெங்கடேஸ்வரன் நாராயணசுவாமி உடன் இருந்தார். 'மார்ஸ் ரோவர்' எனப்படும் இந்த செவ்வாய் கிரக தரையுலாவி (ரோவர்) கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்களை சென்னை அமெரிக்க துணை தூதரகத்தில் அமைந்திருக்கும் அமெரிக்க மையம் வரவேற்கிறது. கார்னெல் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த முழு அளவிலான மாதிரி, வாஷிங்டன்னில் உள்ள ஸ்மித்சோனியனின் விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்திலும், துபாய் 2020 சர்வதேச கண்காட்சியின் போது அமெரிக்க அரங்கிலும் காட்சிக்கு வைக்கப்பட்டு, பின்னர் தற்போது சென்னை வந்தடைந்துள்ளது.
இந்த தற்காலிக கண்காட்சியின் போது செவ்வாய் கிரக ஆய்வு குறித்த பல்வேறு சுவாரசிய செயல்பாடுகள் பள்ளி மாணவர்களுக்காக திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியானது வருகிற ஜனவரி வரை, திங்கள் முதல் வெள்ளி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். தங்கள் மாணவர்களை அழைத்து வர விரும்பும் பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமெரிக்க மையத்தைத் ChennaiAmCenter@state.gov என்ற மின்னஞ்சல் மற்றும் 044-2857-4223 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
2003-ல் தன் பயணத்தை தொடங்கிய நாசாவின் ''ஆபர்ச்சூனிட்டி'' செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருந்ததற்கான ஆதாரங்களைத் தேடும் நோக்கத்துடன் 2004-ல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.
செவ்வாய் கிரகத்தில் முன்னர் நீர் இருந்ததற்கான சான்றுகள் மற்றும் அந்த சமயத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக செவ்வாய் கிரகம் இருந்திருக்கக் கூடும் உள்ளிட்ட பல முக்கிய கண்டுபிடிப்புகளை தனது பணியின் போது ஆபர்ச்சூனிட்டி மேற்கொண்டது. திட்டமிடப்பட்ட காலம் 90 நாட்களாக இருந்த போதும், செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை சுமார் 15 ஆண்டுகளாக ஆபர்ச்சூனிட்டி ஆராய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.- கலெக்டர் தகவல் கண்காட்சி குறித்து அமெரிக்கத் துணைத் தூதர் ஜூடித் ரேவின் கூறியதாவது
உலகத்தை மாற்றி அமைப்பதற்கு நமது அமெரிக்க மற்றும் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளது. நாசா மற்றும் இஸ்ரோ உள்பட விண்வெளித் துறையில் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து விரிவடையும் என்று நாங்கள் நம்புகிறோம். செவ்வாய் மற்றும் அதை தாண்டிய எதிர்கால பயணங்கள் இதில் அடங்கும்.
மாணவர்களாகிய நீங்கள் எதை படிக்க விரும்புகிறீர்கள், எங்கு வேலை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை பற்றி சிந்திக்க தொடங்கும்போது, விண்வெளி துறையில் உங்களுக்கு முன்னால் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய இந்த கண்காட்சி ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம். இதன் மூலம் உங்களில் பலர் விண்வெளி கல்வி மற்றும் பணி குறித்து உத்வேகம் பெறுவீர்கள் என்றும் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
A model display of NASA's Mars rover 'Opportunity' at the US Center in Chennai
The American Embassy has announced that students and the public can see a model exhibition of NASA's Mars rover 'Opportunity' at the American Center in Chennai. Chennai An exhibition of a full-scale model of NASA's Mars Rover 'Opportunity' was inaugurated by US Deputy Ambassador Judith Rave at the US Center in Chennai on 8th (Thursday).
Venkateswaran Narayanaswamy, a Pulbright-Nehru Project scholar for India, was present at the time. The American Center at the US Consulate in Chennai welcomes students, teachers and science enthusiasts to visit the 'Mars Rover' exhibition. The full-scale model, developed by students of Cornell University, has been on display at the Smithsonian's Air and Space Museum in Washington and the US Pavilion during the Dubai International Expo 2020, and has now arrived in Chennai.
Various interesting activities related to Mars exploration are planned for school students during this temporary exhibition. The exhibition is open until next January, Monday to Friday 10am to 4pm. School administrators and members of the public who wish to bring their students should contact the American Center at ChennaiAmCenter@state.gov and 044-2857-4223 to register in advance.
Launched in 2003, NASA's 'Opportunity' landed on Mars in 2004 with the aim of searching for evidence of water on the Martian surface.
During its mission, Opportunity made a number of key discoveries, including evidence that water once existed on Mars and that Mars may have been habitable at the time. Although the planned duration was 90 days, it is noteworthy that Opportunity has explored the surface of Mars for about 15 years.
Our American and Indian scientists and engineers have the opportunity to work together to transform the world. We hope that the relationship between our two countries will continue to expand in the space sector, including NASA and ISRO. This includes future missions to Mars and beyond.
As students begin to think about what they want to study and where they want to work, we hope this exhibition will inspire you to explore all the opportunities that lie ahead of you in the space industry. We hope that this will inspire many of you to pursue space education and careers. This is what he said.
No comments:
Post a Comment