அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்த சில எளிய வழிமுறைகள் Here are some simple tips to stop frequent belching - Minnalseithi

Latest

Search This Blog

Monday, December 26, 2022

அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்த சில எளிய வழிமுறைகள் Here are some simple tips to stop frequent belching

அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்த சில எளிய வழிமுறைகள்

இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையைக் குறைக்கக் கூடிய கீரை வகைகள், இஞ்சி, சோம்பு, சீரகம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அடிக்கடி வரும் ஏப்பத்தைத் தடுக்க முடியும். ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் உணவுடன் சேர்த்து சிறிது காற்றையும் விழுங்குகிறோம். 

அந்தக் காற்றை இரைப்பை வெளியேற்றும் போது தான் 'ஏப்பம்' உண்டாகிறது. ஒரு நாளில் ஒருமுறை ஏப்பம் வருவது இயல்புதான். ஆனால், அடிக்கடி வரும் ஏப்பம், அருகில் இருப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். 

இந்தப் பிரச்சினையை வீட்டுச் சமையல் அறையில் உள்ள பொருட்களின் மூலம் எளிதாகத் தீர்க்க முடியும். அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். வேகமாகச் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களைப் பருகுவது போன்ற பல காரணங்களால் ஏப்பம் வரும். இரவில் தாமதமாகச் சாப்பிடும்போதும், மசாலா சேர்த்த உணவுகளை அதிகமாக உண்ணும்போதும் இரைப்பையில் அமிலத்தன்மை அதிகரிக்கும். 

இதனால் நெஞ்செரிச்சலுடன் புளிப்பான ஏப்பம் உண்டாகும். சாப்பிட்டவுடன் படுத்தால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு ஏப்பம் வரும். அடிக்கடி, அதிக சத்தத்துடனும், ஒருவித வாடையுடனும் வரும் ஏப்பம் அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்று புண் ஆகியவற்றின் அறிகுறி ஆகும். 

இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கும் அமிலத்தன்மையைக் குறைக்கக் கூடிய கீரை வகைகள், இஞ்சி, சோம்பு, சீரகம் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அடிக்கடி வரும் ஏப்பத்தைத் தடுக்க முடியும். 

பழங்கள்:

 ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஏப்பம் வருவது குறையும். புதினா மற்றும் ஏலக்காய்

 டீ: 

கொதிக்கும் தண்ணீரில் புதினா இலைகளைப் போட்டு ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கொதிக்க வைக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து குடித்து வரலாம். வாயுத் தன்மை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது ஏலக்காய் டீ குடிப்பது செரிமானத்தைத் துரிதப்படுத்த உதவும். இதனால் ஏப்பம் வருவது குறையும். 

பெருங்காயம்: 

சூடான நீரில் சிறிது பெருங்காயத்தைக் கலந்து உணவு சாப்பிடுவதற்கு முன்பு குடித்தால், ஏப்பம் உள்ளிட்ட வயிறு தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். தயிர்: தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வயிற்று கோளாறுகளை குணமாக்கும் திறன் கொண்டவை. 

பூண்டு:

 பூண்டில் இருக்கும் ரசாயன மூலக்கூறுகள், வாயு தொடர்பான கோளாறுகளை நீக்கும். எனவே இதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

Here are some simple tips to stop frequent belching

Adding greens such as ginger, anise, cumin, etc. to the daily diet can reduce the excess acidity in the stomach and prevent frequent belching. Every time we eat we swallow some air along with the food.

It is only when the stomach expels that air that 'belching' occurs. Burping once a day is normal. But frequent belching can make those around you frown.

This problem can be easily solved with the ingredients in the home kitchen. Let's know about it here. Burping can be caused by many things like eating too fast, drinking water, and sipping on carbonated drinks. Eating late at night and eating a lot of spicy foods can increase stomach acidity.

This causes sour belching with heartburn. Lying down after eating causes indigestion and belching. Frequent, loud belching with a kind of burping is a symptom of indigestion, heartburn, stomach ulcer.

Adding greens such as ginger, anise, cumin, etc. to the daily diet can reduce the excess acidity in the stomach and prevent frequent belching.

Fruits:

  Consuming oranges, lemons and papayas will reduce burping. Mint and cardamom

  Tea:

Add mint leaves to boiling water and boil for five minutes. Then filter the water and mix it with native sugar and drink it. Drinking cardamom tea while eating gassy foods can help speed up digestion. This will reduce belching.

Evergreen:

A small amount of aloe vera mixed with hot water and drunk before meals can cure stomach related problems including belching. Yogurt: The beneficial bacteria in yogurt are capable of curing stomach disorders.

Garlic:

  The chemical molecules present in garlic relieve gas-related disorders. So you can include it in your daily diet.

No comments:

Post a Comment