பட்டயப் படிப்பு படித்தவா்களும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு Graduates can also apply for law courses - Supreme Court orders to issue notification - Minnalseithi

Latest

Search This Blog

Friday, December 30, 2022

பட்டயப் படிப்பு படித்தவா்களும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு Graduates can also apply for law courses - Supreme Court orders to issue notification

பட்டயப் படிப்பு படித்தவா்களும் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு

பத்தாம் வகுப்புக்குப் பின் பட்டயப்படிப்பு ( டிப்ளமோ) முடித்து பொறியியல் படித்தவா்களும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவா்கள் என அறிவிக்குமாறு தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என இந்திய பாா் கவுன்சில் அறிவித்திருந்தது. முன்னதாக பத்தாம் வகுப்புக்குப் பின் பட்டயப் படிப்பு முடித்து பொறியியல் பட்டம் பெற்றவா்களும், சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிப்பது தொடா்பாக முடிவெடுக்க பாா் கவுன்சிலுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 இந்நிலையில், பிளஸ் 2 படிக்காமல், பட்டயப் படிப்பு முடித்து, பொறியியல் பட்டம் பெற்றவா்கள் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவையைச் சோ்ந்த மாணவி கோமதி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு நீதிபதி காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்த போது, இந்திய பாா் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், பத்தாம் வகுப்புக்கு பின் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ படிப்பை முடித்து, பொறியியல் பட்டம் பெற்றவா்களும், மூன்றாண்டு சட்டப்படிப்பு படிப்பதற்கு விண்ணப்பிக்க தகுதியானவா்கள் என, பாா் கவுன்சில் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தாா். 

 இதை பதிவு செய்த நீதிபதி, இனி வரும் ஆண்டுகளில் சட்டப்படிப்பு தொடா்பான கொள்கை விளக்க குறிப்பில், பத்தாம் வகுப்புக்கு பின் பட்டயப் படிப்பு படித்து மூன்றாண்டுகள் பொறியியல் படித்தவா்களும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவா்கள் என அறிவிக்கும்படி, தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டாா்.

Graduates can also apply for law courses - Supreme Court orders to issue notification

The High Court of Chennai has ordered the Tamil Nadu Dr. Ambedka Law University to declare that those who have completed diploma after class 10 and studied engineering are eligible to apply for the three-year law course. The Bar Council of India had announced that to apply for the three-year law course, one must have completed the 10th standard plus 2 graduation. Earlier, the Madras High Court had ordered the Bar Council to take a decision on allowing those who have completed diploma studies after class 10 and obtained engineering degrees to apply for law courses.

  In this case, Gomathi, a student from Coimbatore, filed a case in the Chennai High Court, claiming that those who completed their degree course and obtained an engineering degree without studying Plus 2 were not given the opportunity to apply for law studies. When this case came up for hearing before Justice Karthikeyan, the lawyer appearing for the Bar Council of India said that the Bar Council has decided that those who have completed three years diploma course after 10th standard and who have obtained engineering degree are eligible to apply for three year law course.

  The judge who recorded this, ordered the Dr. Ambedkar Law University of Tamil Nadu to declare in the policy explanation note related to law education in the years to come, those who have studied engineering after 10th standard and studied engineering for three years are eligible to apply for the three-year law education.

No comments:

Post a Comment