ஐ.ஏ.எஸ் மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு Government of Tamil Nadu has invited those who have qualified in the main examination to participate in the IAS model personality test - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, December 8, 2022

ஐ.ஏ.எஸ் மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு Government of Tamil Nadu has invited those who have qualified in the main examination to participate in the IAS model personality test

ஐ.ஏ.எஸ் மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு

 தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும். 

 அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நிகழாண்டு முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 76 பேரில், 15 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 18 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணும் அடக்கம். 

 மேலும் இருவர் தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி அடைந்துள்ளனர். இப்பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

 பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்டோரால் நடத்தப்படும் இத்தேர்வில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிற தேர்வர்களும் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தை, aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 94442 86657 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அல்லது 044 2462 1909 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத் தேர்வு தேதி விரைவில் www.civilservice coaching.com என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும்.

 In a press release issued by the Chief Secretary V. Irayanbu, it has been said:- The All India Civil Services Examination Training Center conducted by the Tamil Nadu Government in Chennai will be conducted by the Central Government Staff Selection Commission. 

 Coaching is provided to the candidates who are facing the All India Civil Services First Level and Mains Examinations. Here, out of 76 candidates who appeared for the primary examination this year, 15 males and 3 females have passed the exam. This includes a differently-abled woman. Two more have chosen Tamil as an optional subject and passed.

 A mock personality test will be conducted for those who pass through this training center. Other candidates who have cleared the mains will also be allowed to appear in this exam which will be conducted by serving and retired IAS officers. No fee is required for this. Candidates who want to participate in this way can express their interest by contacting the email address aicscc.gov@gmail.com or WhatsApp number 94442 86657 or telephone number 044 2462 1909. Model Personality Test date will be announced soon on www.civilservice coaching.com.

No comments:

Post a Comment