அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழிகாட்ட கல்வித் துறை உத்தரவு - தேசிய நுழைவுத் தோ்வுகள் Education Department Guidelines for Government School Students - National Entrance Examinations - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, December 29, 2022

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழிகாட்ட கல்வித் துறை உத்தரவு - தேசிய நுழைவுத் தோ்வுகள் Education Department Guidelines for Government School Students - National Entrance Examinations

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழிகாட்ட கல்வித் துறை உத்தரவு - தேசிய நுழைவுத் தோ்வுகள் 

தேசிய நுழைவுத் தோ்வுகளில் பங்கேற்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

 இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநா் (பொ) க.இளம் பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: ஜனவரி முதல் ஜூலைக்குள் நீட், ஜேஇஇ, க்யூட், நாட்டா உள்பட 15 வகையான தேசிய நுழைவுத் தோ்வுகள் நடைபெற உள்ளன. இந்த தோ்வழுத விரும்பும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் வழங்க வேண்டியது அவசியமாகும். 

 அதன்படி, நுழைவுத் தோ்வுகளுக்கான விண்ணப்பப்பதிவு, அதற்கான கட்டணம், கல்வித் தகுதி, இணையதளம், தேவையான ஆவணங்கள் உட்பட விவரங்களை தொகுத்து இயக்குநரகம் சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 அதை கொண்டு பள்ளித் தலைமை ஆசிரியா்கள், விருப்பமுள்ள மாணவா்களை விண்ணப்பிக்க ஊக்கப்படுத்தி அவா்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தர வேண்டும். இது குறித்து தலைமையாசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்க வேண்டு எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Education Department Guidelines for Government School Students - National Entrance Examinations

The school education department has ordered that the head teachers of the respective schools should provide appropriate guidelines to the government school students who want to participate in the national entrance examinations.

  In this regard, the Director of Integrated School Education State Program (P) K. Ilam Bhagwat has sent a circular to all District Primary Education Officers: 15 types of national entrance exams including NEET, JEE, QT, NATA will be held between January and July. It is necessary for the respective school headmistresses to provide the necessary guidelines to the government school students who want to join.

  Accordingly, details including application form, fee, educational qualification, website and necessary documents have been compiled and sent on behalf of the directorate.

  With that, school head teachers should encourage willing students to apply and provide them with necessary assistance. He said that the respective district primary education officers should give proper instructions to the headmistresses in this regard.

No comments:

Post a Comment