அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ப்ராஜெக்ட் அசிஸ்டெண்ட் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Assistant
காலியிடங்கள்: 7
வயது வரம்பு : அதிகபட்சம் 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: கலை, அறிவியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ .12,000 வழங்கப்படும் .
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் ctdt.annauniv.edu என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரம் மற்றும் உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து Director, Centre for sponsored research and consultancy, Anna University ,Chennai 600025 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2022
No comments:
Post a Comment