Ashwin's new record in Test matches! டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 25, 2022

Ashwin's new record in Test matches! டெஸ்ட் போட்டியில் அஸ்வின் புதிய சாதனை!

இந்திய அணியின் ரவிச்சந்தின் அஸ்வின் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் எடுத்த 6-வது வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக கபில் தேவ், ஷான் பொல்லாக், ஸ்டூவர்ட் பிராட், ஷேன் வார்னே மற்றும் சர் ரிச்சர்ட் ஹாட்லி ஆகிய 5 கிரிக்கெட் வீரர்களும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். அந்த வரிசையில் 6-வது வீரராக தமிழக வீரர் அஸ்வின் இணைந்துள்ளார். 

 இந்த சாதனையை அவர் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின்போது படைத்தார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் குறுகிய காலத்தில் 450 விக்கெட்டுகளைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைக்க உள்ளார். தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் 447 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 450 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அவர் இந்த சாதனையை தான் விளையாடிய 93-வது டெஸ்ட் போட்டியில் படைத்திருந்தார். 

 அனில் கும்ப்ளேவின் இந்த சாதனையை முறியடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைக்க அஸ்வினுக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன. வங்கதேசத்துக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி அவரது 88-வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது

India's Ravichandin Ashwin has set a new world record in the second Test match against Bangladesh. India registered a thrilling 3-wicket win in the 2nd and final Test against Bangladesh. Meanwhile, India's star spinner Ravichandran Ashwin has set a new world record of becoming the 6th player to score 3000 runs and 400 wickets in international Tests. Prior to this, 5 cricketers namely Kapil Dev, Shaun Pollock, Stuart Broad, Shane Warne and Sir Richard Hadley have achieved this feat. Tamil Nadu player Ashwin has joined as the 6th player in that line.

  He achieved this feat on the second day of the 2nd Test against Bangladesh. He is also going to create a record of being the player who has crossed 450 wickets in the shortest time in Test matches. Currently he has taken 447 wickets in Test matches. Former Indian player Anil Kumble holds the record of being the Indian player who has taken 450 wickets in the fewest Test matches. He had set this record in his 93rd Test match.

  Ashwin needs just 4 more wickets to break Anil Kumble's record and become the fastest Indian player to take 450 Test wickets. Ravichandran Ashwin's second Test against Bangladesh was his 88th International Test.

No comments:

Post a Comment