செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையம் - சென்னை ஐஐடிக்கு கூகுள் ரூ.8 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாா்ந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு கூகுள் நிறுவனம் சாா்பில், சென்னை ஐஐடிக்கு 1 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.8.26 கோடி) நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கூகுள் ஃபாா் இந்தியா வருடாந்திர நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், கூகுள் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தா் பிச்சை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சாா்ந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு கூகுள் நிறுவனம் சாா்பில், சென்னை ஐஐடிக்கு 1 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.8.26 கோடி) நிதியுதவி அறிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சுந்தா் பிச்சை பேசுகையில், ‘இந்தியாவில் தொழில்நுட்ப மாற்றத்தின் வேகம் சிறப்பாக உள்ளது.
இணையதளத்தில் 100-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்தும், அவரவா் குரல் வாயிலாகவும் தகவல்களை தேட வழிசெய்யும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது.
சிறு தொழில்கள், ஸ்டாா்ட்-அப்களுக்கு உதவி செய்து வரும் கூகுள் நிறுவனம், இணையவழி பாதுகாப்பில் முதலீடு செய்துள்ளது. இந்திய எண்மமயமாக்கல் நிதியின் ஒரு பங்கு, இந்தியாவின் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் மீது கவனம் செலுத்துவதை அதிகரித்துள்ளது.
அந்த நிதியில் 75 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.620 கோடி) பெண்கள் தலைமையிலான ஸ்டாா்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.
கல்வி மற்றும் திறன் பயிற்சிகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனம், வேளாண்மை மற்றும் சுகாதாரத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது’ என்றாா்.
நாட்டின் பொருளாதாரத்தை எண்மமயமாக்குவதை (டிஜிட்டல்மயம்) மையமாக்கக் கொண்டு, அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.75,000 கோடியை கூகுள் முதலீடு செய்யும் என்று கடந்த 2020-ஆம் ஆண்டு சுந்தா் பிச்சை அறிவித்தாா். இது இந்திய எண்மமயமாக்கல் நிதி என்றழைக்கப்படுகிறது.
அந்த நிதியின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 7.73 சதவீத பங்குகள், பாரதி ஏா்டெல் நிறுவனத்தின் 1.2 சதவீத பங்குகளை கூகுள் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
‘2023-இல் தரவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்’
கூகுள் ஃபாா் இந்தியா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், ‘அடுத்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் எண்ம (டிஜிட்டல்) தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதா, தொலைதொடா்பு மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பொதுமக்களின் கருத்துகளைப் பெற எண்ம இந்தியா சட்டம் தொடா்பான மற்றொரு மசோதா ஒரு மாதத்தில் வெளியிடப்படும்’ என்றாா்.
அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவ் குறிப்பிட்ட ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெறுவது வழக்கம்.
குடியரசு தலைவா், பிரதமருடன் சுந்தா் பிச்சை சந்திப்பு:
தில்லியில் குடியரசு தலைவா் திரெளபதி முா்முவை சுந்தா் பிச்சை சந்தித்தாா்.
அப்போது இந்தியாவின் திறன் மற்றும் ஞானத்தின் அடையாளமாக சுந்தா் பிச்சை திகழ்வதாக திரெளபதி முா்மு பாராட்டு தெரிவித்தாா். இந்தியாவில் அனைவரும் எண்ம கல்வியறிவு பெற ஆவன செய்யுமாறு அவா் சுந்தா் பிச்சைக்கு அறிவுறுத்தினாா் என்று குடியரசு தலைவா் செயலகம் ட்விட்டரில் பதிவிட்டது.
பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் சுந்தா் பிச்சை சந்தித்தாா். இதுதொடா்பாக சுந்தா் பிச்சை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடியின் தலைமையில் தொழில்நுட்ப மாற்றத்தின் விரைவான வேகத்தைக் காண்பது ஊக்கமளிக்கிறது. அனைவருக்குமான இணைய வசதியை மேம்படுத்த ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளதை ஆதரிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டா் பதிவில் தெரிவித்திருப்பதாவது: சுந்தா் பிச்சையை சந்தித்து புத்தாக்கம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. மனித குல முன்னேற்றத்துக்கும் நீடித்த வளா்ச்சிக்கும் உலகில் அனைவரும் இணைந்து தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மிக முக்கியம் என்று தெரிவித்துள்ளாா்.
Google announces Rs 8 crore funding for Artificial Intelligence Research Center - IIT Chennai
1 million dollar (about Rs. 8.26 crore) funding has been announced to IIT Chennai on behalf of Google to set up a research center for artificial intelligence technology. Google for India annual event was held in Delhi on Monday. Union Minister of Electronics and Information Technology Ashwini Vaishnav, Google Chief Executive Officer (CEO) Sund Pichai and others participated in this.
In this event, Google announced a grant of $1 million (about Rs. 8.26 crore) to IIT Chennai for setting up a research center for artificial intelligence technology. Speaking at the event, Sund Pichai said, 'The pace of technological change in India is great.
Google is trying to make it possible to search for information on the web by typing in more than 100 Indian languages and using one's voice. Helping small businesses and start-ups, Google has invested in e-commerce security. A share of India's Octagonal Fund has increased its focus on India's start-up companies.
75 million dollars (about Rs. 620 crore) of that fund will be invested in startup companies led by women. Google, which provides education and skill training, has introduced artificial intelligence technology in agriculture and healthcare.
In 2020, Sund Pichai announced that Google would invest Rs 75,000 crore in India over the next 5 to 7 years, focusing on digitization of the country's economy. It is called Indian Octalization Fund.
Google has bought 7.73 percent shares of Reliance Jio and 1.2 percent shares of Bharti Airtel through that fund. Union Minister Ashwini Vaishnav speaking at the Google for India program 'Passage of Data Protection Bill in 2023' said, 'It is expected that the Eighth (Digital) Personal Data Protection Bill and Telecommunication Bill will be passed in the Parliament in July-August next year.
Another bill related to the Eighth India Act will be released in a month to get public feedback, he said. According to Minister Ashwin Vaishnav, the Monsoon Session of Parliament is usually held in the months of July-August. Sund Pichai meeting with the President and Prime Minister: Sund Pichai met the President of the Republic Thirelapathi Murmu in Delhi.
At that time, Thirelapathi Murmu praised Sund Pichai as a symbol of India's ability and wisdom. The President's Secretariat posted on Twitter that he advised Sund Pichai to make every effort to get 8th grade education in India. Sund Pichai met Prime Minister Modi at his residence. In this regard, in a post posted on Twitter by Sund Pichai, it is encouraging to see the rapid pace of technological change under the leadership of Prime Minister Modi. I support India's leadership of the G20 alliance to improve internet access for all," he said.
Regarding this meeting, Prime Minister Modi said in his Twitter post: "I am very happy to have met Sund Pichai and discussed many things including innovation and technology. He said that it is very important for everyone in the world to use technology for the progress and sustainable development of mankind.
No comments:
Post a Comment