மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 48.79 சதவீதம் பேர் இணைத்துள்ளனர் 48.79 percent people have linked Aadhaar number with electricity connection - Minnalseithi

Latest

Search This Blog

Friday, December 23, 2022

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 48.79 சதவீதம் பேர் இணைத்துள்ளனர் 48.79 percent people have linked Aadhaar number with electricity connection

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 48.79 சதவீதம் பேர் இணைத்துள்ளனர் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நெல்லை மின்பகிர்மான வட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து அனைத்து பிரிவு அலுவலகத்திலும் சிறப்பு முகாம்கள் மூலம் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் மேலப்பாளையம் பிரிவு-2 அலுவலகத்திற்கு உட்பட்ட அம்பை சாலையில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமை மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 347 மின் நுகர்வோர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்து உள்ளனர்.

 இது 45.12 சதவீதமாகும். அதே போல், நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகத்திலும் நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 23 பேர் ஆதார் எண்ணை மின்இணைப்பு எண்ணுடன் இணைத்து உள்ளனர். இது 48.79 சதவீதமாகும், என்றார். மேலும் மீதியுள்ள மின்நுகர்வோர் விரைவில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க ஆலோசனை வழங்கினார்.

48.79 percent people have linked Aadhaar number with electricity connection In Tamil Nadu Power Generation and Distribution Corporation Nellie power distribution circle, the work of linking Aadhaar number with electricity connection number is going on through special camps in all divisional offices from 28th of last month.

In this situation, Supervising Electrical Engineer Guruswamy inspected the special camp set up on Ambai Road under Melapalayam Division-2 office yesterday. He said that 5 lakh 22 thousand 347 electricity consumers have linked their Aadhaar number with electricity connection number through special camps in Nellie and Tenkasi districts under Nellie power distribution circle.

  It is 45.12 percent. Similarly, 1 lakh 3 thousand 23 people have linked Aadhaar number with electricity connection number so far through the special camps being conducted in all divisional offices in Nellai urban zone. It is 48.79 percent, he said. And remaining electricity consumers advised to link electricity connection number with Aadhaar number soon.

No comments:

Post a Comment