'குரூப் - 2, 2ஏ' முதன்மை தேர்வுக்கு மனிதநேய மையத்தில் இலவச பயிற்சி - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, December 4, 2022

'குரூப் - 2, 2ஏ' முதன்மை தேர்வுக்கு மனிதநேய மையத்தில் இலவச பயிற்சி

'குரூப் - 2, 2ஏ' முதன்மை தேர்வுக்கு மனிதநேய மையத்தில் இலவச பயிற்சி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,- டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், 'குரூப் - 2, 2 ஏ' முதன்மை தேர்வுக்கு, மனிதநேய அறக்கட்டளை சார்பில், ஆன்லைனில் இலவச பயிற்சி அளிக்கப்படும்' என, அதன் நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். 

 இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கை: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த, 5,529 பணியிடங்களுக்கான, 'குரூப் 2, 2 ஏ' முதல்நிலை தேர்வு முடிவுகள் நவ., 8ல் வெளியானது. அதில், தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மை தேர்வு எழுத, மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்காக, 58 ஆயிரத்து, 81 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதிகமான மாணவர்களுக்கு, நேரடி வகுப்பு நடத்துவது சாத்தியம் இல்லை என்பதால், www.mntfreeias.com என்ற இணையதளத்தில், இன்று முதல், 2023 பிப்., 23 வரை இலவச பயிற்சி வழங்கப்படும். 

 முதன்மை தேர்வுக்கான பாடத் திட்டத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு பாடக் குறிப்புகள் இணையத்தில் பகிரப்படும். ஆன்லைன் வாயிலாகவே எழுத்து பயிற்சியும் அளிக்கப்படும். 'குரூப் - 2' முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், 044 -- 2435 8373, 2433 0095 என்ற தொலைபேசி எண்கள் அல்லது www.mntfreeias.com என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு சைதை துரைசாமி கூறியுள்ளார்.
Free Coaching for 'Group - 2, 2A' Main Examination at Humanity Center Free Online Coaching for 'Group - 2, 2A' Main Examination conducted by Tamil Nadu Public Service Commission- TNPSC on behalf of Humanity Foundation will be provided', said its company president Saidai Duraisamy.

  In this regard, he issued a statement: TNPSC announced the 'Group 2, 2A' primary examination results for 5,529 posts on November 8. We are planning to give training to those who have passed the main exam and humanities IAS in a free educational institute. For this, 58 thousand, 81 students have been selected. As it is not possible to conduct live classes for many students, free coaching will be provided from today till 23rd Feb 2023 at www.mntfreeias.com.

  Based on the Syllabus for Mains Exam, Syllabus Notes will be shared online for the students. Online writing training is also provided. Candidates who have passed the 'Group-2' Primary Examination can register through the phone numbers 044 -- 2435 8373, 2433 0095 or through the website www.mntfreeias.com. Saithai Duraisamy has said this.

No comments:

Post a Comment