வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் நடத்தப்படும் இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சி அளிக்க விரும்புவோா் ஜன.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ.வீரராகவராவ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
டி.என்.பி.எஸ்சி., டி.என்.யூ.எஸ்.ஆா்.பி., எஸ்.எஸ்.சி., ஆா்.ஆா்.பி., ஐ.பி.பி.எஸ்., டி.ஆா்.பி. போன்ற தோ்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றன.
இப்பயிற்சி வகுப்புகள் மூலம் ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோா் பயிற்சி பெறுகின்றனா்.
இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள, முன்அனுபவமுள்ள ஆசிரியா்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள், போட்டித்தோ்வில் வெற்றி பெற்றவா்கள் https.//bicly/facutvregistrationform என்ற கூகுள் இணைப்பில் விண்ணப்பத்தை ஜன.10-க்குள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 044-22501006, 22501002 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.
Those who want to train in the free training courses conducted by the Department of Employment and Training can apply before January 10.
In this regard, the Director of Employment and Training Department, Mr. Veeraraghavarao, issued a press release on Wednesday: Training courses for various competitive exams are being conducted through the voluntary study circles operating in the district employment offices.
DNPSC, DNUSRBP, SSC, RRB, IPBS, DRB . Free training courses for competitive exams conducted by exam agencies like More than 20 thousand people are trained annually through these training courses.
Interested and experienced teachers and ex-students who are willing to train in these training courses, who have won the competition, can apply on the Google link https://bicly/facutvregistrationform by Jan.10. For more details contact 044-22501006, 22501002.
No comments:
Post a Comment