இஷ்டத்துக்கு பணம் அனுப்ப முடியாது: UPI செயலிகளுக்கு கிடுக்கிப்பிடி! Can't send money on demand: Grab UPI apps! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, November 23, 2022

இஷ்டத்துக்கு பணம் அனுப்ப முடியாது: UPI செயலிகளுக்கு கிடுக்கிப்பிடி! Can't send money on demand: Grab UPI apps!

இஷ்டத்துக்கு பணம் அனுப்ப முடியாது: UPI செயலிகளுக்கு கிடுக்கிப்பிடி! 

Google Pay, PhonePe, Paytmல் பணம் அனுப்ப வருகிறது 'லிமிட்'! 

 யுபிஐ (UPI) செயலிகளான கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்றவற்றில் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கு விரைவில் கட்டுப்பாடு கொண்டு வரப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுபிஐ-யை செயல்படுத்திவரும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்பிசிஐ), ரிசர்வ் வங்கியுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளது. அதாவது, தற்போது யுபிஐ செயலிகள் மூலம் நடக்கும் பணப்பரிமாற்றத்தை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்து, அந்தப் பரிந்துரையை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. 

 ஆனால், தற்போதுள்ள நிலவரப்படி கூகுள்பே, போன்பே, பேடிஎம் செயலிகளில் கணக்கு வைத்திருப்போர், ஒரு நாளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பரிமாற்றம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் ஒரு நாளுக்கு குறிப்பிட்ட அளவு பணம் மட்டும்தான், ஒரு நாளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பணப்பரிமாற்றம் என்று கொண்டு வரப்படலாம்.

 மூன்றாம் தரப்பு செயலிகள் வழங்கும் (டிபிஏபி) நிறுவனங்களுக்கும் பரிமாற்றத்தின் அளவை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்று என்பிசிஐ பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே பலகட்ட ஆலோசனை நடத்தப்பட்டு, அனைத்து அம்சங்களும் முழுமையாக விவாதிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் என்பிசிஐ அதிகாரிகள், நிதிஅமைச்சக அதிகாரிகள், ஆர்பிஐ அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், கூகுள்பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளில் பரிமாற்றம் செய்வதற்கு டிசம்பர் 31ம் தேதிக்குள் கட்டுப்பாடு கொண்டுவருவதற்கு குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. என்பிசிஐ தனது பரிந்துரையை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி, அந்த பரிந்துரைகளை டிசம்பர் 31ம்தேதிக்குள் நடைமுறைப்படுத்துங்கள் என்று மட்டும் கேட்டுக்கொண்டுள்ளது. 

 அதேநேரம், என்பிசிஐ அமைப்பும், தனது இறுதி முடிவை அதாவது செயலிகள் பரிமாற்றத்துக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது. 2020ம் ஆண்டு என்பிசிஐ வெளியிட்ட உத்தரவில், தேர்டுபார்டி செயலிகள், யுபிஐ மூலம் நடந்த பரிமாற்றத்தை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என்று தெரிவித்தது. அதாவது கடந்த 3 மாதங்களில் எவ்வளவு மதிப்பிலான பரிமாற்றம் நடந்துள்ளதோ அந்த பரிமாற்றத்தில் இருந்து 30 சதவீதம் அளவை குறைக்க வேண்டும் என கூறப்படுகிறது. 

 Can't send money on demand: Grab UPI apps! 

 Google Pay, PhonePe, Paytm are sending money 'Limit'! 

 According to reports, the UPI apps like Google Pay, PhonePe, Paytm etc. will soon be regulated for money transfer. The National Payments Corporation of India (NBCI), which implements UPI, has consulted with the Reserve Bank in this regard. That is, it has recommended a 30 percent reduction in the amount of money transferred through UPI apps, and has asked that the recommendation be implemented by December 31. However, as per the current status, account holders in Google Pay, Phone Pay and Paytm applications can transfer as much as they want in a day. Henceforth only a certain amount of money per day, and only a certain number of remittances per day can be brought.

 NBCI has recommended that third-party app providers (TPAPs) also reduce the amount of transfer by 30 percent. Several consultations have already been held in this regard and all aspects have been thoroughly discussed. Officials of NBCI, Finance Ministry and RBI officials participated in this meeting. However, no final decision has yet been taken regarding the regulation of transactions on apps like GooglePay, PhonePay, Paytm by December 31. 

NBCI has sent its recommendations to RBI and has only asked them to implement the recommendations by December 31. At the same time, NBCI is also expected to take its final decision by the end of this month regarding restrictions on the transfer of apps. In a 2020 directive issued by NBCI, third-party apps should reduce transactions through UPI by 30 percent. That is, it is said that 30 percent should be reduced from the amount of exchange that has taken place in the last 3 months.

No comments:

Post a Comment