கல்வி கட்டண உதவி திட்டம்: சென்னை ஐ.ஐ.டி., அறிவிப்பு
தனியார் ஐ.டி., நிறுவனம் வழியாக, 10 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கட்டண உதவி வழங்கப்பட உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை ஐ.ஐ.டி., சார்பில், என்.பி.டி.இ.எல்., என்ற, &'ஆன்லைன்&' வழிபடிப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த படிப்பில் சேரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு, கட்டண உதவி வழங்க, தனியார் ஐ.டி., நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 18 மாநிலங்களைச் சேர்ந்த, 160 கல்லுாரிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்கள் கட்டண உதவி பெற உள்ளனர். என்.பி.டி.இ.எல்., ஆன்லைன் தளத்தில், இதன் வீடியோ பாடங்கள் சர்வதேச அளவில், 140 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் சேர்வதற்கு, கல்லுாரிகளின் நிர்வாகத்தினர், மாணவர்களின் குடும்ப வருவாய் தகுதியை ஆய்வு செய்து பரிந்துரை செய்வர்.
இவ்வாறு அதில் இது குறித்து, ஐ.ஐ.டி., ஆன்லைன் வழி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆன்ட்ரூ தங்கராஜ் கூறியதாவது:
தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியால், ஐ.ஐ.டி.,க்கள் நடத்தும் ஆன்லைன் படிப்பில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, கட்டண உதவி வழங்கப்படுகிறது.
நாடு முழுதும், 5,000 கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், ஆன்லைன் படிப்பில் சேர்ந்து, தங்களின் கற்றல் தகுதியை உயர்த்தி கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினர்.
Tuition Assistance Scheme: IIT Chennai, Notification
IIT Chennai has announced that 10,000 students will be given tuition assistance through private IT institutes. In this regard, a press release issued by Chennai I.I.T.: On behalf of Chennai I.I.T.
A contract has been entered into with a private IT company to provide fee assistance to students from economically backward families enrolled in this course. According to this, 10 thousand students studying in 160 colleges from 18 states are going to get fee assistance. On NPTEL's online platform, its video lessons have been viewed 1.4 billion times internationally.
For admission in this scheme, the management of the colleges will analyze the family income eligibility of the students and recommend them.
Regarding this, Andrew Thangaraj, Online Education Coordinator, IIT, said:
First-generation graduates enrolled in online courses run by IITs with the help of a private IT company are given fee assistance.
Across the country, students from over 5,000 colleges are taking online courses to enhance their learning. He said thus.
No comments:
Post a Comment