ரெயில் பயணிகள் இனி தாங்கள் விரும்பும் உணவுகளை தேர்வு செய்யலாம் Train passengers can now choose the food they want - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, November 16, 2022

ரெயில் பயணிகள் இனி தாங்கள் விரும்பும் உணவுகளை தேர்வு செய்யலாம் Train passengers can now choose the food they want

ரெயில் பயணிகள் இனி தாங்கள் விரும்பும் உணவுகளை தேர்வு செய்யலாம்  

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- 

ரெயில் பயணத்தின்போது, பயணிகளுக்கான உணவுகளை வழங்க ரெயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. உணவு விநியோக சேவையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகை கள், பருவகால உணவு வகைகள், பண்டிகைகால உணவுகள் என பல்வேறு தொகுப்பு உணவுகளை ஐஆர்சிடிசி (இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்)யின் இணைய தளம் அல்லது செயலி வாயிலாக பெறலாம். 

வெளியூர் பயணத்தின்போது, ஆங்காங்கே பிரபலமான உணவுகளை பெறும் வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு, குழந்தைகளுக்கான உணவு, சிறு தானிய அடிப்படையிலான உள்ளூர் தயாரிப்புகள் உள்ளிட்ட ஆரோக்கியம் சார்ந்த உணவு என பயணிகள் தாங்கள் விரும்பிய உணவுகளை தேர்வு செய்யலாம். சதாப்தி, ராஜ்தானி போன்ற ரெயில்களில் பயணிகளுக்கான கட்டணத்தில் உணவுக்கான கட்டணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முன்கூட்டியே உணவுக்கான கட்டணம் செலுத்தியும் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Train passengers can now choose the food they want 

 A press release issued by Southern Railway states:- During the train journey, the railway administration is taking various measures to provide food to the passengers. In order to improve the food delivery service, various packages of traditional food, seasonal food, festive food from different states can be availed through IRCTC (Indian Railway Food and Tourism Corporation) website or app. While traveling abroad, the facility of getting popular food is also brought. Travelers can choose their preferred meals from diabetic food, baby food, small grain based local products and health food. Meal charges are included in passenger fare on trains like Shatabdi and Rajdhani. Advance food payment can also be obtained. It says so.

No comments:

Post a Comment