மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி | Teaching in Central Government Schools - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, November 3, 2022

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி | Teaching in Central Government Schools

மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி



 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?CTET-DECEMBER 2022 Eligibilty: விண்ணப்பங்கள் Central Teacher Eligibility Test (CTET) என்ற இணையதளம் மூலமாக பெறப்பட்டு வருகின்ற்ன. விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி நவம்பர் 24 நள்ளிரவு 11.59 மணி வரையாகும். 

 2022ம் ஆண்டுக்கான மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் Central Teacher Eligibility Test (CTET) என்ற இணையதளம் மூலமாக பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி நவம்பர் 24 நள்ளிரவு 11.59 மணி வரையாகும். 

  மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு என்றால் என்ன?
2009ம் ஆண்டு இயற்றப்பட்ட குழந்தைகளுக்குக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் நியமனத்திற்கு குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

அதன்படி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் நியமனங்களுக்கு மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 

 இந்த ஆசிரியர் தகுதித் எழுத்துத் தேர்வு இரண்டு தாள்கள் கொண்டதாக இருக்கும். முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்தேர்வுக்கு 

யார் விண்ணப்பிக்கலாம்?

ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (National Council for Teacher Education) இந்த தேர்வுக்கான கல்வித் தகுதிகளை நிர்ணயிக்கிறது. 

  1ம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான கல்வித்தகுதிகள் : 
(கல்வித் தகுதிகள் தோராயமாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன . ஆங்கிலத்தில் உள்ளதே இறுதியானது)
  1. மேல்நிலைக் கல்வி (10 +2, அல்லது அதற்கு இணையான கல்வியை) 50% மதிப்பெண்களுடன் முடித்து, 2 வருட ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு முடித்த அல்லது இறுதியாண்டு தேர்வில் தோன்றும் மாணவர்கள் (Higher Secondary (or its equivalent) with at least 50% marks and passed or appearing in final year of 2-year Diploma in Elementary Education (by whatever name known) (அல்லது) 
  2. மேல்நிலைக் கல்வி (10, +2 அல்லது அதற்கு இணையான) படிப்பை 45% மதிப்பெண்களுடன் முடித்து, NCTE (Recognition Norms and Procedure), Regulations, 2002 வழிமுறையின் படி 2 வருட ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு முடித்த அல்லது இறுதியாண்டு தேர்வில் தோன்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் ( Senior Secondary (or its equivalent) with at least 45% marks and passed or appearing in final year of 2- year Diploma in Elementary Education (by whatever name known), in accordance with the NCTE (Recognition Norms and Procedure), Regulations, 2002) (அல்லது)
  3. மேல்நிலைக் கல்வி (10, +2 அல்லது அதற்கு இணையான) படிப்பை 50% மதிப்பெண்களுடன் முடித்து, 4 வருட பி. இஐ. எட் முடித்து/ இறுதியாண்டு தேர்வில் தோன்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் (Senior Secondary (or its equivalent) with at least 50% marks and passed or appearing in final year of 4- year Bachelor of Elementary Education (B.El.Ed)) (அல்லது) 
  4. மேல்நிலைக் கல்வி (10, +2 அல்லது அதற்கு இணையான) படிப்பை 50% மதிப்பெண்களுடன் முடித்து, 2 வருட ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு (சிறப்பு கல்வி) முடித்த அல்லது இறுதியாண்டு தேர்வில் தோன்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் (Senior Secondary (or its equivalent) with at least 50% marks and 2-year Diploma in Education (Special Education) (அல்லது) 
  5. பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன், இளங்கலை கல்வி பட்டப்படிப்பை முடித்த அல்லது இறுதியாண்டு தேர்வில் தோன்றும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் Graduation with at least 50% marks and Bachelor of Education (B.Ed.) ; (அல்லது) 
  6. 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் முடித்து, 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்- எம்.எட் முடித்து/ இறுதியாண்டு தேர்வில் தோன்றியிருக்க வேண்டும். (Post-Graduation with a minimum 55% marks or equivalent grade and three-year integrated B.Ed.-M.Ed ) 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான கல்வித் தகுதிகள்: பட்டப்படிப்புடன், 2 வருட தொடக்கக் கல்வியை முடித்து/ இறுதியாண்டு தேர்வில் தோன்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் (Graduation and passed or appearing in final year of 2-year Diploma in Elementary Education (by whatever name known). 

  அல்லது 

குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்து ஒரு வருட பி.எட் படிப்பு முடித்து/ இறுதியாண்டு தேர்வில் தோன்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் (Graduation with at least 50% marks and passed or appearing in 1-year Bachelor in Education (B.Ed). 

  அல்லது

குறைந்தது 45% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்து, NCTE (Recognition Norms and Procedure) Regulations issued விதிமுறையின் படி ஓராண்டு பி.எட் முடித்த அல்லது இறுதியாண்டுத் தேர்வில் தோன்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். (Graduation with at least 45% marks and passed or appearing in 1- year Bachelor in Education (B.Ed), in accordance with the from time to time in this regard) 

  அல்லது 

மேல்நிலைக் கல்வி (10, +2 அல்லது அதற்கு இணையான) படிப்பை 50% மதிப்பெண்களுடன் முடித்து, 4 வருட இளங்கலை கல்வி பட்டப்படிப்பை மடுத்த முடித்த அல்லது இறுதியாண்டு தேர்வில் தோன்றும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் (Senior Secondary (or its equivalent) with at least 50% marks and passed or appearing in final year of 4- year Bachelor of Elementary Education (B.El.Ed) 

  அல்லது

மேல்நிலைக் கல்வி (10, +2 அல்லது அதற்கு இணையான) படிப்பை 50% மதிப்பெண்களுடன் முடித்து, 4 வருட பி.ஏ/பி.எஸ்சி எட் அல்லது பிஏ.எட்/பிஎஸ்சி எட் படிப்பை முடித்த அல்லது இறுதி ஆண்டுத் தேர்வில் தோன்றும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் (Senior Secondary (or its equivalent) with at least 50% marks and passed or appearing in final year of 4- year B.A/B.Sc.Ed or B.A.Ed/B.Sc.Ed.) 

  அல்லது 

 பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன், சிறப்பு கல்வி பிரிவில் 1 ஆண்டு இளங்கலை கல்வி பட்டப்படிப்பை முடித்த அல்லது இறுதியாண்டு தேர்வில் தோன்றும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் Graduation with at least 50% marks and Bachelor of Education (B.Ed.); 

  அல்லது

பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன், சிறப்பு கல்வி பிரிவில் 1 ஆண்டு இளங்கலை கல்வி பட்டப்படிப்பை முடித்த அல்லது இறுதியாண்டு தேர்வில் தோன்றும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் Graduation with at least 50% marks and passed or appearing in 1-year B.Ed. (Special Education); 

  அல்லது 

55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் முடித்து, 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்- எம்.எட் முடித்து/ இறுதியாண்டு தேர்வில் தோன்றியிருக்க வேண்டும். 


Post-Graduation with a minimum 55% marks or equivalent grade and three-year integrated B.Ed.-M.Ed. 

 மேலும், விவரங்கள் அறிய இந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment