தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் நாளை இயங்கும் - அரசு அறிவிப்பு Schools and colleges in Tamil Nadu will function tomorrow - Government announcement - Minnalseithi

Latest

Search This Blog

Friday, November 18, 2022

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் நாளை இயங்கும் - அரசு அறிவிப்பு Schools and colleges in Tamil Nadu will function tomorrow - Government announcement

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் நாளை இயங்கும் - அரசு அறிவிப்பு 

தீபாவளி பண்டிகை கடந்த மாதம் (அக்டோபர்) 24-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை வழங்க ஆசிரியர் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதனை ஏற்று, தமிழக அரசு, பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்கள் (25.10.22) அன்று விடுமுறை விடப்படுகிறது என்றும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19-ந்தேதியன்று(நாளை) பணி நாளாக அனுசரிக்கப்படும் என்றும் அறிவித்தது. ஏற்கனவே அரசு அறிவித்தபடி, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் நாளை (சனிக்கிழமை) இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Schools and colleges in Tamil Nadu will function tomorrow - Government announcement

 Diwali festival was celebrated on 24th of last month (October). In this regard, there were requests from various quarters, including the teachers' unions, to give a holiday the day after Diwali so that the teachers and students who had gone to their hometowns could return. Accepting it, the Government of Tamil Nadu announced that all educational institutions including schools and colleges will be given a holiday on (25.10.22) and November 19th (tomorrow) will be observed as a working day to compensate for that holiday. As already announced by the government, it has been announced that schools, colleges and all educational institutions will function tomorrow (Saturday).

No comments:

Post a Comment