தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சட்டம் படித்தவருக்கு வேலை..!
தமிழக அரசின் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்குச் சட்டம் படித்தவருக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்குச் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்தை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித்தகுதி மற்றும் இதர விவரங்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.
பணியின் விவரங்கள்:பணியின் பெயர் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer)
பணியிடம்
1
ஊர்
செங்கல்பட்டு
வயது
40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.
சம்பளம்
ரூ.27,804/- (தொகுப்பூதியம்)
பணிக்கான கல்வித்தகுதி:
வேலைவாய்ப்பு அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு/என்ஜீஓ/ பெண்கள் சார்ந்த சட்டத்துறை போன்றவற்றில் குறைந்தது 2 வருடம் அனுபவம் வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பற்றி அறிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் https://chengalpattu.nic.in/ என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் விண்ணப்பத்தைக் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலம் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://cdn.s3waas.gov.in/
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அரசினர் சிறப்பு இல்ல வளாகம்,
G.S.T சாலை, தாலுகா காவல் நிலையம் அருகில்,
செங்கல்பட்டு – 603 002.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 30.11.2022 மாலை 5.45 வரை.
No comments:
Post a Comment