NIFT | நிப்ட் - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, November 9, 2022

NIFT | நிப்ட்

நிப்ட்


 ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு துறையில் தேவையான மனிதவளத்தை மேம்படுத்தும் வகையில் 1986ம் ஆண்டு நிறுவப்பட்ட நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி, பேஷன் துறையில் சிறந்த கல்வியை வழங்குவதில் நாட்டின் முன்னோடி கல்வி நிறுவனமாகவும் உள்ளது. 

  முக்கியத்துவம்:

இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி, 2006ம் ஆண்டு ஒரு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்நிறுவனம், கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு உறுதுணையாகவும் உள்ளது. 

 இந்நிறுவனத்தின் அனைத்து வளாகங்களிலும் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் உயர்தர வசதிகளிடன் கல்வி கற்பிக்கப்படுவதுடன், சர்வதேச சூழலுக்கு ஏற்ப இந்திய தொழில்துறையை தயார்படுத்தும் வகையில், தேவையான அறிவை பகிர்ந்து கொள்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது. 

  வளாகங்கள்:

பெங்களூரு, போபால், சென்னை, டாமன், காந்திநகர், ஹைதராபாத், கன்னூர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, பாட்னா, பஞ்சகுலா, ரேபரேலி, சில்லாங், காங்க்ரா, ஜோத்பூர், புவனேஷ்வர், ஸ்ரீநகர் ஆகிய 18 நகரங்களில் இக்கல்வி நிறுவனம் செயல்படுகிறது.

  வழங்கப்படும் படிப்புகள்

இளநிலை பட்டப்படிப்புகள் - 4 ஆண்டுகள்:
பி.டெஸ்., - பேஷன் டிசைன் 
பி.டெஸ்., - லெதர் டிசைன் 
பி.டெஸ்., - ஆக்சிசரி டிசைன் 
பி.டெஸ்., - டெக்ஸ்டைல் டிசைன் 
பி.டெஸ்., - நிட்வியர் டிசைன் 
பி.டெஸ்., - பேஷன் கம்யூனிகேஷன் 
பி.டெக்., - அப்பேரல் புரொடக்சன் 

  முதுநிலை பட்டப்படிப்புகள் - 2 ஆண்டுகள்:
எம்.டெஸ்., - டிசைன்
 எம்.எப்.எம்., - பேஷன் மேனேஜ்மெண்ட் 
எம்.எப்டெக்., - பேஷன் டெக்னாலஜி 

  ஆராய்ச்சி படிப்பு: 

பிஎச்.டி., 

  சேர்க்கை முறை:

நிப்ட் கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக மூன்றடுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 
முதலில், ‘கிரியேடிவ் எபிலிட்டி டெஸ்ட்’ - சி.ஏ.டி., தேர்வினையும், அதை தொடர்ந்து ‘ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட்’ -ஜி.ஏ.டி., தேர்வினையும் எழுத வேண்டும். 
 அதன்பிறகு, நேர்முகத்தேர்வு வாயிலாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்திய அரசின் விதிமுறைப்படி இடஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 
நாட்டின் பல்வேறு நகரங்களில் நுழைத்தேர்வு நடத்தப்படுகிறது. 

  குறிப்பு:

பி.எப்.டெக்., எம்.எப்.எம்., மற்றும் எம்.எப்டெக்., ஆகிய படிப்புகளுக்கு ஜி.ஏ.டி., தேர்வினை மட்டும் எழுத வேண்டும். 

  விண்ணப்பிக்க கடைசி நாள்: 

டிசம்பர் 31

  விபரங்களுக்கு: 

No comments:

Post a Comment