இனி தமிழ்மொழியில் மருத்துவ பாடப் புத்தகங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன குட்நியூஸ்!
மருத்துவப் படிப்பில் அத்தியாவசியமாக கருதப்படும் 13 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு மேற்கொண்டு வருகிறது.
மருத்துவ படிப்பு மாணவர்கள் பயன்படும் வகையில் தமிழ்மொழியில் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்வியில் மாணவர்களின் தாய்மொழியில் அமைய வேண்டும் என்று புதிய தேசியக் கல்வி கொள்கை பரிந்துரைக்கிறது.
அதன்படி, மத்திய பிரதேசம் மாநில அரசு நாட்டிலேயே முதல் முறையாக இந்தியில் எம்பிபிஎஸ் படிப்பை கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, மருத்துவக் கல்வியை இந்தி மொழியில் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உத்திர பிரதேச அரசும் அறிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தமிழ் வழியில் பயின்ற அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பாடு வகையில் தமிழ்மொழியில் மருத்துவ பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் அத்தியாவசியமாக கருதப்படும் 13 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான பணிகளை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கு மேற்கொண்டு வருகிறது.
மாணவர்கள் மருத்துவ படிப்பை தமிழ் மொழியில் கற்றாலும், தேர்வு முறை ஆங்கில வழியில் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment