ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு | JIPMER HOSPITAL JOB OPPORTUNITY - Minnalseithi

Latest

Search This Blog

Friday, November 4, 2022

ஜிப்மர் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு | JIPMER HOSPITAL JOB OPPORTUNITY

ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்கள்... முழு விவரம்!


இப்பணிக்கு பிஎஸ்சி நர்சிங் மற்றும் டிஜிஎன்எம் முடித்தவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 433 செவிலியர் அதிகாரி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்பர் மருத்துவமனை இயங்கி வருகிறது. அங்கு காலியாக உள்ள 433 செவிலியர் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியில் தகுதியான இந்தியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

  காலிப்பணியிடங்கள்: 
433 பொதுப் பிரிவு-175, இ டபிள்யுஎஸ்- 43, ஓ பி சி-116, எஸ் சி-66,எஸ்டி-33 என மொத்தமாக 433 செவிலியர் அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்ப படவுள்ளது. கல்வித்தகுதிபிஎஸ்சி நர்சிங் மற்றும் டிஜிஎல்எம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  பணி அனுபவம்
டிஜிஎன்எம் முடித்தவர்கள் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

  வயது வரம்பு 
18 வயது முதல் 35 வயது உடையவர்களாக இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். வயது வரம்பில் ஓபிசிக்கு மூன்று ஆண்டுகளும் எஸ்.சி-எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

  தேர்வு முறை 
எழுத்துத் தேர்வில் ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண் விதம் 100 கேள்விகள் கேட்கப்படும், ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். செவிலியர் பாடப் பிரிவில் இருந்து 70 கேள்விகளும் பொது அறிவு பொது நுண்ணறிவு ஆங்கிலம் கணிதம் ஆகிய பாடப் பிரிவில் 30 சதவித கேள்விகளும் கேட்கப்படும்.

 செவிலியர் அதிகாரிகள் பணிக்கு வரும் ஏழாம் தேதி முதல் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை ஜிப்மர் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 10ஆம் தேதி முதல் ஜிப்மர் இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

 ஆன்லைன் முறையில் டிசம்பர் 18ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு ஜிப்மர் இணையதள முகவரி https://jipmer.edu.in/..

No comments:

Post a Comment